Last Updated : 26 Mar, 2017 09:12 AM

 

Published : 26 Mar 2017 09:12 AM
Last Updated : 26 Mar 2017 09:12 AM

பறவையினங்களை பாதுகாக்க இளைஞர்களின் புதிய முயற்சி

பறவைகளைப் பாதுகாக்கவும், நகரங்களில் இருந்து வெளியேறிய பறவையினங்களை வரவேற்கும் வகையிலும், ‘திருச்சி சரணாலயா’ என்ற புதிய திட்டத்தை முகநூல் பக்கம் வாயிலாக திருச்சி இளை ஞர்கள் இருவர் தொடங்கியுள்ளனர்.

நகரமயமாக்கலால் பறவை களின் முக்கிய வசிப்பிடமான மரங்கள் அழிந்து, நகர்ப் பகுதிகளில் பறவைகளைக் காண்பதே இப் போது அரிதாகிவிட்டது. எனவே, பறவைகளைப் பாதுகாக்கவும், அவற்றை நகரங்களுக்கு திரும்ப வரச் செய்யும் நோக்கிலும் கடந்த சில ஆண்டுகளாக பறவைகளுக்கு இரை, தண்ணீர் வைப்பதை தங்கள் வீட்டில் செய்து வந்த திருச்சியைச் சேர்ந்த கோபிநாத், அருண்குமார் ஆகிய இருவரும், பொதுமக்களுடன் இணைந்து திருச்சி மாவட்டத்தையே சரணாலயமாக மாற்றத் திட்டமிட்டு, ‘திருச்சி சரணாலயா’ என்ற முகநூல் பக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறிய தாவது: பல்லுயிர் பெருக்கத்தில் பறவைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆனால், கல்வி, வேலை, குடும்ப பொருளாதாரம் என்று ஓடிக் கொண்டே இருக்கும் மனிதர் களுக்கு பறவைகள் மீது அக்கறை யும், அவற்றை பாதுகாக்க வேண் டும் என்ற விழிப்புணர்வும் குறைந்து விட்டது.

நகரமயமாக்கல் காரணமாக மரங்கள் அழிந்துவிட்டதால் பறவைகள் இரை தேடி வெளியிடங்களுக்குச் சென்று விட்டன. இரை, தண்ணீர் கிடைக்காமல் பறவைகள் அழிந்து வருகின்றன. நகர்ப்பகுதிகளில் இப்போது பறவைகளை மிக சொற்ப அளவில்தான் காண முடி கிறது.

பறவையினங்கள் திரளாகக் கூடும் இடத்தை சரணாலயம் என்கிறோம். எனவே, மக்களின் ஒத்துழைப்புடன் பறவைகளுக்கு தீவனம், தண்ணீர் வைப்பதன் மூலம் மாவட்டம் முழுவதும் சிறிய சரணாலயங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி வீட்டின் மொட்டை மாடி, பால்கனி, தோட்டம், மைதா னம், பொதுவான காலி இடங்களில் பறவைகளுக்கு இரை, தண்ணீர் வைக்க விரும்புவோருக்கு 2 மண் தட்டுகளும், 1 கிலோ கலப்புத் தீவனமும் இலவசமாக அளிக்கி றோம். குறிப்பிட்ட ஒரே தீவனத்தை சில பறவைகள் உட்கொள்வ தில்லை. எனவேதான், பழங்கள் மற்றும் கலப்புத் தீவனத்தை அவைகளுக்கு வைக்கிறோம்.

முதலில் பறவைகள் வருகை இல்லாமலும், சில நாட்களில் ஒன்றிரண்டாகவும், பின்னர் அதிக எண்ணிக்கையிலும் பல்வேறு வகை யான பறவைகள் வரத் தொடங் கும். சில மாதங்களில் நமது சுற்றுப் புறங்களில் மீண்டும் பறவைகள் எழுப்பும் ஓசையைக் கேட்டு மகிழ லாம். இதை நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளோம்.

பறவைகளுக்கு இரை, தண் ணீர் வைக்கும் இப்பணி, ஓய்வு பெற்ற முதியவர்கள், குழந்தை கள், பெண்கள் என குடும்பத்தினர் அனைவருக்கும் மனநிறைவை, மகிழ்ச்சியைத் தரும். பறவை களுக்கு இரை, தண்ணீர் வைக்க விரும்புவோர் ‘திருச்சி சரணாலயா’ என்ற முகநூல் பக்கத்தை ‘லைக்’ செய்து பின்தொடரலாம்.

இந்தத் திட்டத்துக்கு உதவ விரும்புவோர் பணமாக தருவதைத் தவிர்த்து, மண் தட்டுகள், தீவனங் களை வாங்கிக் கொடுக்கலாம். திருச்சி மட்டுமின்றி எங்கிருந்து யார் தொடர்பு கொண்டாலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற் கான உரிய ஆலோசனைகளைத் தர தயாராக உள்ளோம்” என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x