Published : 21 Jun 2016 08:24 AM
Last Updated : 21 Jun 2016 08:24 AM

காஞ்சிபுரம் மாவட்ட கோயில்களில் திருடுபோன சிலைகளை மீட்க விரைவில் செயல் அலுவலர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருடு போன சிலைகள் குறித்தும் அவற்றை மீட்பது குறித்தும் கோயில்களின் செயல் அலுவ லர்களுடன் ஆலோசிக்க விரைவில் கூட்டம் நடத்தப்படும் என்று அற நிலையத்துறை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர், வரதராஜ பெரு மாள், கயிலாசநாதர், வேதகிரீஸ் வரர், ஸ்தல சயன பெருமாள், கோதண்டராமர், ஆதிகேசவ பெருமாள், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள், கந்தசாமி கோயில், சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் அறநிலை யத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த கோயில்களில் விலை மதிப்பற்ற புராதன சிலைகள், உலோகம் மற்றும் ஐம்பொன்னால் ஆன சிலைகள் உள்ளன. இவற்றில் சில கோயில்களில் இருந்த உலோக மற்றும் விலைமதிப்பற்ற புராதன சிலைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். திருடப் பட்ட கோயில் சிலைகள் குறித்து, அந்தந்த கோயில் நிர் வாகங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித் துள்ளனர். ஆனால், இதுவரை எந்த சிலையும் மீட்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால், கோயில்களில் திருடுபோன சிலைகள் எத்தனை, எந்தெந்த கோயில்கள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன, புகாரின் மீதான தற்போதைய நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து கோயில்களின் செயல் அலுவலர் கள் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட அறைநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் திருடப்பட்ட சிலைகளின் விவரங்கள், எந்தெந்த கோயில் களில் சிலை திருட்டு நடந் துள்ளது மற்றும் திருட்டு தொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்துள்ள புகார்களின் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை போன்றவை குறித்து அறிந்துகொள்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. கோயில் சிலைகளின் பாதுகாப்பு குறித்தும் செயல் அலுவலர்களிடம் கேட்ட றியப்படும். விரைவில் கூட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளி யிடப்படும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x