Published : 15 Mar 2017 08:02 AM
Last Updated : 15 Mar 2017 08:02 AM

ஆர்.கே.நகரில் போட்டியா? புறக்கணிப்பா? - மக்கள் நலக் கூட்டணியில் கருத்து வேறுபாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர் பாக மக்கள் நலக் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, திமுக, தேமுதிக என பலமுனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைக் கொண்ட மக்கள் நலக் கூட்டணி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

கடந்த 2015-ல் ஜெயலலிதா போட்டி யிட்டபோது ஆர்.கே.நகர் இடைத்தேர் தலை திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன. ஆனால், இடதுசாரி கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிட்டார். அதே போல இப்போதும் நாம் போட்டியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலை ம.ந.கூட்டணி புறக்கணித்தது. அப்போது கூட்டணி யில் இருந்த மதிமுக போன்ற கட்சிகள் போட்டியிட விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலக் கூட்டணிக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் ம.ந.கூட்டணியின் ஆத ரவை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் ம.ந.கூட்டணி தலைவர்கள் ஆலோ சனை நடத்தி வருகின்றனர். திமுக வெளிப்படையாக ஆதரவு கோரியுள்ளதால் அக்கட்சியை ஆதரிக்கலாம் அல்லது தேர்தலை புறக்கணிக்கலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. திமுக, அதிமுக, ஓபிஎஸ் ஆகிய மூவரும் ஆதரவு கோரியுள்ளதால் தேர்தலை புறக்கணிக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ஆனால், ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் உறுதியாக உள்ளது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் களத்தில் இல்லாத போதும் 2015-ல் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் 9,710 வாக்குகள் மட்டுமே பெற்றார். கடந்த 2016-ல் தேமுதிக, மதிமுக, தமாகா ஆகிய கட்சிகளின் ஆதரவு இருந்தும் விசிக வேட்பாளர் வசந்திதேவிக்கு 4,195 வாக்குகளே கிடைத்தன. இதை சுட்டிக்காட்டும் இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகரில் போட்டியிட எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சி வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்பட வில்லை.

விரைவில் இறுதி முடிவு

இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச்செயலாளர் ரவிகுமாரிடம் கேட்டபோது, ‘‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக 3 கட்சி தலைவர் களும் ஆலோசித்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சிக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து விரிவாக ஆலோ சிக்கப்பட்டது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் ம.ந.கூட்டணி போட்டியிடும். இது தொடர்பாக 3 கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x