Published : 08 Oct 2014 10:53 AM
Last Updated : 08 Oct 2014 10:53 AM

அதிமுக கொடியுடன் சென்ற வாகனங்கள் கர்நாடகாவுக்குள் நுழையத் தடை: போலீஸாருடன் வாக்குவாதம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கர்நாடக நீதிமன்றத் தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக நிர் வாகிகள் வாகனங்களில் பெங்க ளூர் செல்ல முயன்றனர். அவர் களை கர்நாடக மாநில எல்லை யான அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

அத்திப்பள்ளியில் பெங்களூர் டிஎஸ்பி பல்ராமேகவுடு தலைமை யில் 150-க்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். அதிமுக கட்சி கொடிகளுடன் சென்ற வாகனங் களை கர்நாடக போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிமுக நிர்வாகிகள், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தீவிர சோதனைக்குப் பிறகே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்பட்டன.

அத்திப்பள்ளி வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் பதிவு செய்யப்பட்டன. முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், தனது காரில் பெங்களூர் செல்ல முயன்றார். அவரை தடுத்த கர்நாடக போலீஸாருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரின் காரில் பெங்களூர் சென்றார்.

இதனிடையே ஜெயலலிதா வுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதால், ஓசூர் ஜூஜூவாடி மற்றும் முக்கிய இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணம்மாள் தலைமையில் ஓசூர் ஏஎஸ்பி ரோகினி பிரியதர்ஷினி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், மனோகரன், சரவணன் ஆகியோர் தலைமையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் இரு மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x