Published : 03 Aug 2016 08:29 AM
Last Updated : 03 Aug 2016 08:29 AM

அப்துல் கலாம் பெயர், படத்தை பயன்படுத்த தடை விதிக்க மறுப்பு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது சகோதரர் கலாம் இறந்த பிறகு, அவரது அறிவியல் உதவியாளர் பொன்ராஜ் உள்ளிட்ட வர்கள், அப்துல் கலாம் லட்சிய இந்தியா என்ற கட்சியை தொடங் கினர். கலாம் பெயரில் கட்சி தொடங்கவும், கட்சி கொடியில் கலாம் புகைப்படத்தை பயன் படுத்தவும் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் கலாம் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கலாமின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்து நான் அனுப்பிய மனுவை தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் 19.7.2016-ல் நிராகரித்து உத்தரவிட்டார். தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனு மீது தேர்தல் ஆணையர்கள்தான் உத்தரவிட முடியும். தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் உத்தரவிட முடியாது.

தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலரின் உத்தரவை ரத்து செய்து, கலாம் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதி வேணு கோபால் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடும்போது, “அரசியல் கட்சி தொடர்பான ஆட்சேபங்கள் மீது தேர்தல் ஆணையர்கள்தான் உத்தரவு பிறப்பிக்க முடியும். இதனால் தேர்தல் ஆணையரின் முதன்மை செயலரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, எதிர் தரப்பின் கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றார். பின்னர், தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர், தமிழக தலைமை தேர்தல் ஆணையர், அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சி நிர்வாகிகள் பொன்ராஜ், குமார், திருசெந்தூரான் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x