Published : 26 Oct 2014 02:12 PM
Last Updated : 26 Oct 2014 02:12 PM
நேதாஜி, நேருவின் நெருங்கிய நண்பரான ஏ.சி.என்.நம்பியார் ரஷ்ய உளவாளியாக செயல் பட்டார் என்று பிரிட்டிஷ் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட் டுள்ளது.
அந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:
கேரளாவைச் சேர்ந்த நம்பியார் 1924-ம் ஆண்டில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நிருபராகப் பணியாற்றினார். இந்திய கம்யூ னிஸ்ட் குழுவின் உறுப்பினராக செயல்பட்ட அவர் 1929-ல் ரஷ்யா வுக்கு விருந்தினராகச் சென்றார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் இருந்து நம்பியார் வெளியேற்றப்பட்டார். எனினும் சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பராக இருந்ததால் அவர் மீண்டும் ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்பட்டார்.
1945-ம் ஆண்டில் ஆஸ்திரியா வில் நம்பியார் கைது செய்யப் பட்டார். ஜெர்மனியின் நாஜி படையோடு நெருங்கிய தொடர்பு டையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுவிட்சர்லாந்தின் பெர்னி நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் கவுன்சிலராக செயல்பட்டார். பின்னர் மேற்கு ஜெர்மனிக்கான இந்தியத் தூதராகவும் இறுதியாக ஆங்கில நாளிதழின் நிருபராகவும் பணியாற்றினார். 1920-ம் ஆண்டு முதலே ரஷ்யாவின் உளவாளியாக ஏ.சி.என். நம்பியார் செயல்பட்டார் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.சி.என். நம்பியார் முன்னாள் பிரதமர் நேருவுக்கும் நெருங்கிய நண்பராக திகழ்ந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பிரிட்டிஷ் அரசின் எதிர்ப்பை மீறி மேற்கு ஜெர்மனிக்கான இந்தியத் தூதராக நம்பியாரை நேரு நியமித்ததாகவும் அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.