Published : 19 Jun 2016 08:06 AM
Last Updated : 19 Jun 2016 08:06 AM

‘போர்க்களத்தில் ஒரு பூ’ பட வழக்கு: இசைப்பிரியாவின் தாயாருடன் பேசி சுமுகத்தீர்வு காண உத்தரவு

இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போர் மற்றும் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவங் களை மையமாக வைத்து ‘போர்க் களத்தில் ஒரு பூ’ என்ற திரைப் படத்தை இயக்குநர் கே.கணேசன் இயக்கினார். இப்படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாலியல் காட்சிகள் மற்றும் இந்திய, இலங்கை தொடர்பான பிரச்சினைகள் இடம்பெற்றிருப்ப தால் அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கடந்த ஆண்டு மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை வெளியிடஅனுமதிக்கக்கூடாது என இசைப்பிரியாவின் தாயார் தர்மினி வாகிசன், சகோதரி டி.வேதரஞ்சனி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம், படத்தை வெளியிடுவது தொடர்பாக அதன் தயாரிப்பாளர் குருநாத் செல்லசாமி, இயக்குநர் கணேசன் ஆகியோர் லண்டனில் உள்ள இசைப்பிரியாவின் தாயார் தர்மினி வாகிசன், சகோதரி டி.வேதரஞ்சனி ஆகியோரிடம் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் வரும் நாளை (திங்கள்) மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் பேசி சுமுகத்தீர்வு காண வேண்டும் என்றார்.

மேலும் அதுதொடர்பான அறிக்கையை ஜூன் 22-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசார ணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x