Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

கல்லூரி மாணவர்கள் ரகளையால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு- 15 மாணவர்களை கைது செய்தது போலீஸ்

சென்னை மாநகர பஸ்ஸில் தாளம் போட்டுக் கொண்டு ரகளை யில் ஈடுபட்டதால் கல்லூரி மாணவர் களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்ஸை மத்திய பணிமனை உள்ளே கொண்டு சென்ற ஓட்டுநரையும் மாணவர்கள் தாக்கிய தால், ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடபழனியிலிருந்து பிராட்வே செல்லும் (17M) மாநகர பஸ்ஸில் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற் பட்ட மாணவர்கள் ஏறி தாளம் போட்டபடி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை தட்டிக் கேட்ட பயணிகளுக்கும் மாணவர்களுக் கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பல்லவன் இல்லம் அருகே உள்ள மத்திய பணிமனைக்கு உள்ளே பஸ்ஸை ஓட்டுநர் நடராஜன் ஓட்டிச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மாணவர்கள் அண்ணா சாலைக்கு வந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து 2 வேன்க ளில் வந்த போலீஸார் மாணவர் களை துரத்தினர். மாணவர்கள் பாடிகாட் முனீஸ்வரர் கோயில் உள்ளே ஓடிவிட்டனர். அப்போது 15 மாணவர்களை போலீஸார் பிடித்தனர்.

அப்போது அங்கு கூடிய போக்குவரத்து ஊழியர்கள் தாங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், மாணவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் உறுதி யளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால், அந்த சாலையில் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்ட்ரலில் ரயில் பிடிக்க செல்லும் மக்களும், அரசு பொது மருத்து வனை செல்வோரும் கடுமையான வெயிலில் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளும், முதியோரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இது தொடர்பாக இணை ஆணையர் சங்கர் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக 15 மாணவர்களை கைது செய்துள்

ளோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும். ஏற்கெனவே, கல்லூரி முதல்வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, முதல்கட்ட கூட்டத்தை நடத்தியுள்ளோம். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கல்லூரி மாணவர்கள், போக்குவரத்து ஊழியர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசவுள்ளோம்” என்றார்.

இது தொடர்பாக தொ.மு.ச.பொருளாளர் கி.நட ராஜன் கூறுகையில், “தினமும் போக்குவரத்து ஊழியர்கள் தாக்கப்படுவது வாடிக்கை யாகிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், போலீஸ் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து பிரச்சினைகளை சுமுகமாக பேசி தீர்க்காத வரையில் இந்த பிரச்சினை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x