Published : 18 Apr 2014 10:14 AM
Last Updated : 18 Apr 2014 10:14 AM

தமிழகத்தில் தேர்தல் போஸ்டர், பேனர்களை பார்க்க முடியவில்லையே!- மலேசிய எம்.பி.க்கள் வியப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைமுறைகளைப் பார்வையிட வந்த மலேசிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களைப் பார்க்க முடியாதது பெரும் ஆச்சரியமாக உள்ளது என்று கூறினர்.

மலேசியாவில் இருந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாடாளு மன்ற தேர்தல் நடைமுறைகளை பார்வையிட வந்துள்ளனர். குலசேகரன், சிவநேசன், சேகரன் மற்றும் வேம்பரசன் ஆகிய இவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை வியாழக்கிழமை சந்தித்தனர். அதன்பிறகு அவர்கள் நிருபர் களிடம் கூறியதாவது:

எங்களது பூர்வீகம் தமிழகம் என்பதால், இங்கு தேர்தலை பார்வையிட விரும்பி வந்துள் ளோம். இங்கு தேர்தல் ஆணை யத்துக்கு இருக்கும் அதி காரத்தை பார்ப்பதற்கு ஆச்சரி யமாக உள்ளது.

உச்சநீதி மன்றத்தை தேர்தல் ஆணையம் அணுகி, பல்வேறு விதிகளை அமல்படுத்துகிறது. ஆனால், மலேசியா வில் நாடாளுமன்றம்தான் இதுபோன்ற விதிகளை அமல்படுத்த முடியும்.

தேர்தல் நேரத்தில் இங்கு தொலைக்காட்சிகள், நாளிதழ் களில் பல்வேறு விதமான செய்திகள், அலசல்கள் இடம் பெறுகின்றன. ஆனால் எங்கள் நாட்டிலோ, தேர் தல் நேரத்தில் அவை அரசின் கட்டுப் பாட்டுக்குள் சென்று விடும்.

தேர்தல் ஆணையத்தின் உறுதியான செயல்பாட்டால், சென்னையில் போஸ்டர்கள், பேனர்கள் போன்றவை காணப்படாதது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு முறை வியப்பை அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் விரலில் இடப்படும் மை இங்கு பல நாட்களுக்கு அழியாமல் இருக்கிறது.

காலத்துக்கேற்ப தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் நடைமுறை மாற்றங்கள் இந்தியாவில் வெகு சிறப்பாக உள்ளது. இங்கு பல நாட்கள் தங்கியிருந்து பார்வையிட முடிவு செய்திருந்தோம்.

ஆனால் எங்கள் கட்சி (ஜனநாயக கூட்டணி) தலை வர் கர்பால் சிங் சாலை விபத்தில் காலையில் இறந்து விட்டார். அதனால் சில நிகழ்ச்சி களில் வெள்ளிக்கிழமை பங்கேற்று விட்டு, மாலையில் நாடு திரும்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x