Published : 28 Jun 2017 09:23 AM
Last Updated : 28 Jun 2017 09:23 AM

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

சென்னை அப்போலோ மருத்துவ மனையில் ஹெலிகாப்டர் ஆம் புலன்ஸ் சேவையை தமிழக சுகா தாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நகரங்களுக்கு வெளியே வெகு தொலைவிலும் புறநகர் பகுதிகளி லும் உள்ள நோயாளிகளுக்கு விரைந்து மருத்துவ சேவை அளிக்கும் வகையில் அப்போலோ மருத்துவமனை பல்வேறு விமான நிறுவனங்களுடன் இணைந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் (ஏர் ஆம்புலன்ஸ்) சேவையை டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களில் வழங்கி வருகிறது. தற்போது ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்கியூ என்ற நிறுவனத்துடன் இணைந்து சென்னையிலும் இந்த சேவையை தொடங்கியுள்ளது.

லயோலா கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹெலி காப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசின் சுகா தாரத்துறை முதன்மைச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இந்த ஹெலி காப்டரில் 2 பைலட்கள், 2 மருத் துவர்கள், அவசர கால சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். இதில் அனைத்து வகையான உயிர்காக்கும் மருத் துவ சாதனங்களும் வைக்கப் பட்டிருக்கும். இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.60 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவையை பெற 1066 என்ற அவசர கால சேவை எண்ணை தொடர்புகொள்ளலாம்

தொடக்க நிகழ்ச்சியில் அப் போலோ மருத்துவமனை துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி, ஏவி யேட்டர்ஸ் ஏர் ரெஸ்கியூ நிறுவன நிர்வாக இயக்குநர் கேப்டன் அருண் சர்மா, லயோலா கல்லூரி முதல்வர் எம்.ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏர் ஆம்புலன்ஸ் சேவை குறித்து அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் பிரீதா ரெட்டி கூறும்போது, ‘‘இந்த சேவை யின் மூலம் பயண நேரத்தை 90 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும். நம் நாட்டில் 6 கோடி பேர் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆண்டுக்கு 5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் சிக்கு கின்றனர். அவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் உடனடி மருத்துவ சிகிச்சை வசதி இல்லாததால் மரணம் அடைகின்றனர். அவசர சிகிச்சைக்கு மட்டுமின்றி, மூளைச் சாவு அடைந்த நோயாளிகளின் உறுப்புகளை விரைவாக ஓரிடத் தில் இருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டுசெல்வதற்கும் இச் சேவை பெரிதும் உதவியாக இருக்கும்’’ என்றார்.

முன்னதாக, லயோலா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வந் திறங்கிய ஹெலிகாப்டர் ஆம் புலன்ஸில் நோயாளியை ஏற்று வது, முதல் உதவி சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப் பட்டது.

அரசு சார்பிலும் ஆம்புலன்ஸ்

நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு நிருபர்களிடம் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

மூளைச்சாவு அடைந்தவர் களிடம் இருந்து தானம் பெற்ற உடல் உறுப்புகளை பிற பகுதிகளில் இருந்து கொண்டுவருவதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் வாடகை முறையில் ஹெலிகாப்டர் ஆம் புலன்ஸ் சேவையை தொடங்கு வதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மாவட்டந்தோறும் ஹெலிபேட்

இதற்காக ஒவ்வொரு மாவட் டத்திலும் ஹெலிபேட் அமைக்க உரிய இடங்களை கண்டறியுமாறு ஆட்சியர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர் பாக கொள்கை ரீதியாக முடிவு எடுக்கப்படும். அனைத்துப் பணி களும் முடிவடைந்தால் இதுதொடர் பாக விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும். சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகை யில் இந்த புதிய திட்டம் அமைந்திருக்கும் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x