Published : 11 Apr 2017 06:52 AM
Last Updated : 11 Apr 2017 06:52 AM

சோதனையில் சிக்கிய ஆவணங்கள், பணம் குறித்து வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜய பாஸ்கரிடம் 4 மணி நேரம் விசாரணை

சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும் நேரில் ஆஜர்

சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள், பணம் குறித்து அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். சமக தலைவர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இடைத்தேர்தல் நடக்கவிருந்த ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த சிலரை போலீ ஸார் கைது செய்தனர். அவர் களிடம் நடத்திய விசாரணையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் பெயரை தெரி வித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அதே நேரத்தில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டன.

ஆர்.கே.நகரில் வாக்காளர் களுக்கு ரூ.88 கோடி பணம் கொடுத் ததற்கான ஆவணங்கள் ஊடகங் களில் வெளியாயின. அந்தப் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. மேலும் பல்வேறு பண பரிவர்த் தனைகள் குறித்த தகவல்களும் அந்த ஆவணங்களில் இருந்தன.

சோதனையின்போது கைப் பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்து விசாரணை நடத்து வதற்காக அமைச்சர் விஜய பாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப் பினர். அதன்படி, சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு நேற்று காலை 11.15 மணி அளவில் அமைச்சர் விஜய பாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர்.

அவர்களிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் தனித்தனி அறைகளில் விசாரணை நடத்தினர். 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 3.30 மணி வரை நடந்தது. மாலை 3.40 மணியளவில் அமைச்சர் விஜய பாஸ்கர், அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.

அங்கிருந்த நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளேன். விசா ரணையின்போது அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்’’ என்றார். அவரைத் தொடர்ந்து சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும் விசாரணை முடிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். சமக தலைவர் சரத்குமாரிடம் மட்டும் இரவு 7 மணி வரை விசாரணை நடந்தது.

விசாரணை குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜய பாஸ்கரின் வீட்டில் நடத்தப் பட்ட சோதனைகள் குறித்து, அவரது தந்தை சின்னத்தம்பியிடம் கடந்த 8-ம் தேதி திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பணப் பரிமாற்றம் குறித்து சின்னத்தம்பி கூறிய தகவல்களை வைத்து விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினோம்.

சரத்குமாருக்கு ரூ.7 கோடி

அமைச்சர் விஜய பாஸ்கருடன் தொடர்பில் இருந்த திருவல்லிக் கேணியைச் சேர்ந்த நயினார், கீழ்ப்பாக்கம் ருபேசா, மயிலாப்பூர் லட்சுமிநாராயணா, எழும்பூர் கார்த்திக், புதுக்கோட்டை பாஸ்கர் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தி பல ஆவணங் களை கைப்பற்றி இருந்தோம். அந்த ஆவணங்களில் பல்வேறு பணப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் உள்ளன. இதுகுறித்தும் விஜய பாஸ்கரிடம் விசாரணை நடத்தினோம்.

சரத்குமாருக்கு விஜய பாஸ்கர் மூலம் ரூ.7 கோடி கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வரு கிறோம். விசாரணையில் கிடைத்த தகவல்களை டெல்லி தலைமை அலுவலகத்துக்கு விரைவில் அனுப்ப இருக்கிறோம்.

அமலாக்கத்துறை விசாரணை

அமைச்சர் விஜய பாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருக் கிறோம். பல்வேறு பணப் பரிமாற் றங்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள். இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமிக்கும் வருமான வரித் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல், வருமான வரித்துறையின் சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு

அமைச்சர் உள்ளிட்டவர்கள் ஆஜரானதையொட்டி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மாநகர காவல் துணை ஆணையர் பெருமாள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்த பொது மக்களும் விசாரணைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x