Published : 15 Apr 2017 09:22 AM
Last Updated : 15 Apr 2017 09:22 AM

மழை இல்லை, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது: சாகுபடி செய்யாமல் இருப்பதே சிறந்த முடிவு- மாற்று வேலைவாய்ப்பு ஏற்படுத்த கோரிக்கை

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதாலும் நிகழாண்டில் பயிர் சாகுபடி செய்யாமல் நிலங்களை தரிசாகப் போடுவதுதான் சிறந்தது என்கின்ற னர் விவசாய சங்க நிர்வாகிகள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் பருவமழை பொய்த்ததால் பெரிய அணைகள், நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டன. பல நீர்த் தேக்கங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின் றன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து குடிநீருக்கே அல்லாட வேண்டிய நிலைக்கு பல கிராமங்கள் தள்ளப் பட்டுள்ளன. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் ஜூன் மாதத்தில் தொடங்க வேண் டிய குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத சூழல்தான் தற்போது நிலவுகிறது.

இந்நிலையில், விவசாயிகள் நிலங்களை தரிசாகப் போடுவது தான் சிறந்தது என்று கூறுகிறார் காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் மகாதான புரம் வி.ராஜாராம். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:

மேட்டூர் அணையில் தற்போது 6 டிஎம்சிக்கும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. அதிலும் பாதி சேறும் சகதியுமாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வழங்கக் கூடிய கர்நாடக அணைகளான ஹேமாவதியில் 1.86 டிஎம்சியும், கிருஷ்ணராஜ சாகரில் 4.68 டிஎம்சி யும், கபினியில் 0.34 டிஎம்சியும்தான் நீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 50 சத வீதத்துக்கும் குறைவாகும். இத னால், கர்நாடகத்தில் இருந்து நிக ழாண்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில் லாத சூழல்தான் உள்ளது.

மேட்டூர் பகுதியில் காவிரிக் கரையோர மாவட்டங்களில் குடி நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் முதல்கட்டமாக காவிரி ஆற்றில் இருந்து பாசனத்துக்கு நீர் எடுக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. மேட்டூர் சுற்றுப் பகுதி யில் உள்ள தொழிற்சாலைகளுக்கு காவிரி ஆற்றின் தண்ணீரை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு மாதத்துக்குள் மேட்டூர் அணை முற்றிலுமாக வறண்டு போகும் அபாயமும், ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருவதால் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறையும் நிலையும் ஏற்படும்.

இந்நிலையில், கடந்த ஆண் டைப் போன்று விவசாயிகள் காவிரி நீரை நம்பியோ, நிலத்தடி நீரை நம்பியோ சாகுபடி பணி களைத் தொடங்க முடியாது. இதனால் விவசாயிகளுக்கு வீண் விரயம்தான் ஏற்படும்.

எனவே, இந்த ஆண்டு தமிழ கத்தில் உள்ள விவசாயிகள் தங்க ளின் நிலங்களை சாகுபடி செய்யா மல் தரிசாகப் போடுவதுதான் சிறந்த முடிவாக இருக்கும். வறட்சியின் காரணமாக தரிசாகப் போடப்படும் நிலங்களைக் கணக் கிட்டு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாற்று வேலைவாய்ப்பு அளித்து ஊதியம் கிடைக்க வழி காண வேண்டும்.

இதைவிடுத்து, இயற்கையை எதிர்த்து விவசாயிகளுக்கு சிறு சிறு மானியங்களை அறிவித்து அதிகபட்ச கடன்களை வழங்கி விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தி சோதனைக்கு உள்ளாக்கும் முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டாம் என்றார்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் மேட்டூர் அணை முற்றிலுமாக வறண்டு போகும் அபாயமும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x