Last Updated : 04 Jul, 2016 02:17 PM

 

Published : 04 Jul 2016 02:17 PM
Last Updated : 04 Jul 2016 02:17 PM

பயனாளிகளிடம் ஆர்வமில்லாததால் கால்நடைகளுக்கு உணவாகும் ஊட்டச்சத்து மாவு

வீணாக்க வேண்டாம் என மருத்துவர் அறிவுரை

ஊட்டச்சத்து மாவுகள் வாங்க பயனாளிகள் மத்தியில் போதிய ஆர்வம் இல்லாத காரணத்தால் அவற்றை கால்நடைகளுக்கு உணவாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சத்துமாவை ஒருபோதும் வீணாக்க வேண்டாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களை எளிதில் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கிராமப் புறங்களை பொருததவரையில் கர்ப்பிணி பெண்கள்கூட சத்தான உணவுகளை உட்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எனவே ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்காக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு அரசு இலவச ஊட்டச்சத்து மாவு வழங்கி வருகிறது.

கோதுமை, மக்காச்சோளம், கம்பு மாவு, முளைகட்டிய கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெல்லத்தூள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கொண்டு இணை உணவு எனப்படும் ஊட்டச்சத்து மாவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் புரதம், கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து போன்ற சத்துகள் நிரம்பியுள்ளன. பெண்கள், குழந்தைகளின் ஊட்டச் சத்து தேவைகளுக்காக ராஜீவ்காந்தி வளரிளம் பெண்களின் தன்னுரிமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் ஊட்டச்சத்து மாவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ஊட்டச்சத்து மாவுகளைப் பெற தகுதியுடையவர்களாக உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 2,001 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலிருந்தும் ஊட்டச் சத்து மாவு பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 130 கிராம் வீதம் ஒவ்வொரு வாரமும் 780 கிராம் அளவு கொண்ட ஊட்டச்சத்து மாவு பாக்கெட் வழங்கப்பட வேண் டும். ஆனால் பெரும்பாலான நகர்ப் பகுதிகள் மற்றும் சில கிராமப்பகு திகளிலும் பயனாளிகள் இந்த மாவு பாக்கெட்டுகளை வாங்கி செல்ல போதிய ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் மாவுகள் விநியோகம் செய்யப்படாமல் அங்கன் வாடி மையங்களிலேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளன. என வே, அந்த பாக்கெட்டுகளை கால்நடை வளர்ப்போர் வாங்கிச்செல்கின்றனர். பய னாளிகளேகூட அவற்றை உட்கொள்ளாமல் தண்ணீரில் கலந்து கால்நடைகளுக்குத்தான் வைத்து விடுகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து கால்ந டைகளுக்கே கிடைக்கிறது.

ஊட்டச்சத்து மாவை பயன்படுத்த வேண்டியதன் முக்கி யத்துவம் குறித்து அதிகாரிகள் யாரும் பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவதில்லை. மக்க ளுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை வீணா கிவிடுகிறது.

இதுகுறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை உணவியல் நிபுணர் ஜெயந்திலால் கூறியது: நோய் வராமல் தடுப்பதற்கு புரோட்டீன், கால்சியம் என அனைத்து சத்துகளும் நமக்கு சரியான அளவு தேவை. குழந்தைகள் வளரும் சமயங்களில் அவர்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் மிக முக்கியமாக தேவைப்படுகின்றன. கிராமம், நகரம் என அரசு வழங்கும் சத்துமாவில் அனைத்து சத்துகளும் சரியான அளவிலேயே உள்ளன. ஆனால் அது நன்றாக இருக்காது எனக் கூறி பலரும் வீணாக்கிவிடுகின்றனர். உண்மையில் அரசு வழங்கும் சத்து மாவில் அனைத்து சத்துகளும் உள்ளன. அதை எந்த காரணம் கொண்டும் வீணடிக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x