Published : 03 May 2017 09:39 AM
Last Updated : 03 May 2017 09:39 AM

இன்றுமுதல் அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்: அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கும் அபாயம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் இன்றுமுதல் அவசரமில்லா அறுவை சிகிச்சைகளை நிறுத்தி அரசு மருத்துவர்கள் போராட் டத்தில் ஈடுபடுவதால் நோ யாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் வெளிநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். அதனால், கேரளா மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளி கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

நேற்று மதுரை அரசு மருத்துவ மனை முன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் ரமேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதனால், நேற்று அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் அடிப்படை சிகிச்சைகள், ஆலோசனைகளை பெறக்கூட முடியாமல் பாதிக்கப் பட்டனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் அவசரமில்லாத அறுவை சிகிச்சை களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர் சங்கம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவ மனையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வெளிநோயாளிகள், 3 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். தினமும் அவசர அறுவை சிகிச்சைகள், அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் 100 நடக்கின்றன.

தற்போது இந்த அறுவை சிகிச்சைகள் நிறுத் தப் போராட்டத்தால் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் உயிருக்கு போராடும் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:

மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 75 அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. அவற்றை இன்று முதல் நிறுத்தப்போகிறோம். அதேநேரத்தில் விபத்துகள், உயிருக்கு ஆபத்தான அவசர அறுவை சிகிச்சைகளை எந்த தடையும் இல்லாமல் மேற்கொள்ள உள்ளோம். அவசர அறுவை சிகிச்சைக்கு கூட்டம் அதிகமாக வந்தாலும், கூடுதல் மருத்துவர்களை நியமித்து அவற்றை தாமதம் இல்லாமல் செய்ய உள்ளோம்.

தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் 550 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். மாவட்டம் முழுவதும் 920 அரசு மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுடைய போராட்டம் இன்று முதல் மேலும் தீவிரம் அடைவதால் ஏழை நோயாளிகள் முழுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x