Published : 04 Apr 2017 09:12 AM
Last Updated : 04 Apr 2017 09:12 AM

வாக்குப்பதிவு அலுவலர்களாக மத்திய அரசு பணியாளர்கள் நியமனம்: மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் தகவல்

ஒவ்வொரு வாக்குச் சாவடியி லும் வாக்குப்பதிவு அலுவலராக மத்திய அரசு பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார் என மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பணிகள் தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு வாக்குச் சாவடியி லும் ஒரு நுண்பார்வையாளர் இருப்பார். அவர் அங்கு நடை பெறும் நிகழ்வுகளை, தேர்தல் பொதுப் பார்வையாளர்களுக்கு அறிக்கையாக அளிப்பார். அதுமட்டுமல்லாது, தேர்தலை மேலும் வெளிப்படையாக நடத்து வதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், நியமிக்கப்பட உள்ள 5 வாக்குச் சாவடி அலுவலர்களில் ஒருவர் மத்திய அரசு பணியாளராக இருக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கள்ள ஓட்டை தடுக்க பயிற்சி

அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதில் குறிப்பாக இறந்தவர்கள் பெயரில் வாக்களிக்கவோ, வெளியூருக்கு குடும்பத்தை மாற்றியுள்ளவர்கள் வாக்களிக்க வந்தாலோ, அவர்களை கடுமை யான விசாரணைக்கு உட்படுத்து வது குறித்து பயிற்சி அளிக்கப் படும். ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க முயன்றது தெரிய வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இயந்திரங்கள் இணைப்பு

வாக்குப் பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு இயந்திரத்துடன், 4 மின்னணு வாக்குப் பதிவு இயந் திரங்கள், யாருக்கு வாக்களித் தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவற்றை இணைப்பது, அந்த இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னங் களை பொருத்துவது உள்ளிட்ட பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளன.

145 விதிமீறல் புகார்கள்

தேர்தல் தொடர்பாக இதுவரை 145 விதிமீறல் புகார்கள் பெறப் பட்டுள்ளன. அவற்றில் 141 புகார் கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது 8 மணி நேரத்துக்கு 10 பறக்கும் படைகள் வீதம், பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். 8 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ள னர். அவர்கள், மாநகர காவல்துறை யுடன் இணைந்து பறக்கும் படை யில் பணியாற்றி வருகின்றனர்.

30 இடங்களில் கேமரா

முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டு வருகின்றன. இதுவரை 30 இடங்களில் பொருத்தப்பட்டுள் ளன. மேலும் பல இடங்களில் பொருத்த திட்டமிட்டிருக்கிறோம். அதன் மூலம் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள் கண்காணிக் கப்படும்.

வாக்காளர் சீட்டு விநியோகம்

வாக்காளர் சீட்டு விநியோகிக் கும் பணி இன்று தொடங்கப்படுகி றது. வரும் சனிக்கிழமைக்குள் 100 சதவீதம் வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டுவிடும். குஜராத்தி லிருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி மனோஜ் அகர்வால், தேர்தல் பார்வையாளராக வர உள்ளார்.

காட்சிகள் நேரடியாக பதிவு

50 அமைவிடங்களில் இடம்பெற் றுள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, காட்சிகளை நேரடியாக சர்வரில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான தடையில்லா இணைய சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 50 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என தெரியவந்துள்ளது. அப்பகுதியில் துணை ராணுவப் படையினரை அதிக அளவில் பணியில் ஈடுபடுத்த உள்ளோம் என்றார்.

பாதுகாப்பில் 1,694 மாநகர போலீஸார்

மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா கூறும்போது, “தேர்தல் பணியில் மாநகர காவல்துறையின் 1,694 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநகர போலீஸார், துணை ராணுவப் படையினரைக் கொண்டு 100 பறக்கும் படைகளை அமைக்க இருக்கிறோம். மேலும் ஒரே இடத்தில் சோதனையிடக்கூடிய 68 குழுக்கள், 24 சோதனைச் சாவடிகளை அமைக்க இருக்கிறோம்.

பணியில் போதுமான போலீஸார், துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், தொகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக 6 பேரை கைது செய்துள்ளோம். இந்த குற்றம் எல்லாம், பிணையில் வெளிவரக்கூடிய சட்டப் பிரிவுக்குள் வருகிறது. அதனால் கைது செய்யப்பட்டவர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x