Last Updated : 23 Jul, 2016 08:12 AM

 

Published : 23 Jul 2016 08:12 AM
Last Updated : 23 Jul 2016 08:12 AM

மதிமுகவில் தொடர்ந்து இயங்கக்கூடிய சூழல் இல்லை: விலகல் குறித்து ரெட்சன் அம்பிகாபதி விளக்கம்

உள்ளாட்சித் தேர்தலிலும் ம.ந.கூட்டணி தொடருவதால் மதிமுகவில் தொடர்ந்து இயங்கக்கூடிய சூழல் இல்லாமல் போய்விட்டது என்று அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த ரெட்சன் அம்பிகாபதி கூறினார்.

மதிமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் ரெட்சன் அம்பிகாபதி. பிரபல கால் டாக்சி நிறுவன உரிமை யாளரான அம்பிகாபதி, வைகோ வுக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்த சூழலில், கட்சியிலிருந்து விலகுவதாக வைகோவுக்கு அம்பி காபதி சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதினார். மதிமுகவி லிருந்து விலகியது தொடர்பாக ரெட்சன் அம்பிகாபதி ‘தி இந்து’ வுக்கு அளித்த பேட்டி:

மதிமுகவிலிருந்து தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் வெளி யேறுகின்றனர். கட்சியில் அப்படி என்னதான் பிரச்சினை நடக்கிறது?

பிரச்சினை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. கட்சித் தொண் டர்கள் மிகவும் விரக்தியில் உள்ள னர். கட்சிக்காக நிறைய செலவு செய்தாயிற்று. ஆனால், தொடர்ந்து தோல்விதான் மிஞ்சுகிறது. உள் ளாட்சித் தேர்தலிலும் திமுக, அதிமுக தான் வெற்றி பெறும் அளவுக்கு பலமாக உள்ளன. இதற்கேற்ப முடிவுகளை எடுக்கா மல் தொடர்ந்து ம.ந.கூட்டணியில் இருப்பது சரியான முடிவாக இருக்காது. எனவே, மதிமுகவில் தொடர்ந்து இயங்கக் கூடிய சூழல் தற்போது இல்லை என்பதால் வெளியேறுகிறேன்.

திமுகவில் இருந்து வந்த உங்க ளுக்காக மத்திய சென்னை மாவட் டத்தையே வைகோ உருவாக் கினார் அவர் முடிவை ஏற்பது தானே சரியாக இருக்கும்?

மதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது நான் வைகோவுடன்தான் இருந்தேன். இடையில் சில காலம் திமுகவுக்கு சென்றிருந்தேன். பிறகு மீண்டும் மதிமுகவுக்கே வந்தேன். ஒரு மாவட்டச் செயலாளராக நான் சரியாகவே பணியாற்றியுள்ளேன். கட்சிக்காக நிறைய செலவு செய்துள்ளேன். எனக்கு வைகோ மீது எந்த கோபமும் கிடையாது. அவர் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை உள்ளது. ஆனால், கூட்டணி தொடர்பான முடிவுகள் தொண்டர்களை திருப்திப்படுத்த வில்லை. தொண்டர்கள் மாவட்ட செயலாளரான என்னைத் தான் நெருக்குகிறார்கள். இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினராக இருந்தவர் நீங்கள், உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு விலகியதாக கூறப்படுகிறதே?

அதில் துளியும் உண்மை இல்லை. நான் பதவிக்காக இந்த முடிவை எடுக்கவில்லை. மதிமுகவில் தொடரக் கூடிய அளவில் தற்போதைய சூழல் இல்லை. மற்ற மாவட்ட செயலாளர் கள் மாதிரி கட்சியையும், தலை மையையும் விமர்சித்துவிட்டு நான் வெளியேறவில்லை.

அப்படியென்றால் மாற்றுக் கட்சிகளில் சேருகிற எண்ணம் ஏதும் இல்லையா?

எப்படி சேராமல் இருக்க முடியும். நிச்சயம் வேறு கட்சியில் சேருவேன். இது தொடர்பாக எனது ஆதரவாளர்களுடன் விவாதித்து வருகிறேன். ஆதரவாளர்களின் ஆலோசனைகளை கேட்ட பிறகு எந்த கட்சியில் சேருவது என்று பின்னர் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x