Last Updated : 03 Feb, 2017 09:41 AM

 

Published : 03 Feb 2017 09:41 AM
Last Updated : 03 Feb 2017 09:41 AM

பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம்: புவியியல் ஆய்வாளர் தகவல்

மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உயிர்வாழ முக்கிய மாகக் கருதப்படும் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய வற்றில் மாற்றம் ஏற்படாத வரை உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால், பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் அவற்றுக் கேற்ப மாற வேண்டியுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியால் உணவு உற்பத்தியில் பெரிதாக எதுவும் செய்ய முடியாததால், உணவு உற்பத்திக்கு விவசாயத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

வேளாண் விளைபொருள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப் பது பருவநிலையே. பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே அதிக அளவு மழையும், வறட்சியும் ஏற்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் குறுவை, சம்பா சாகுபடியுடன் மானாவாரி சாகுபடியும் பொய்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் ஆடி மாதத்தில் சாகுபடியையும் தை மாதத்தில் அறுவடையையும் செய்வர்.

இந்நிலை முற்றிலும் மாறி, பருவநிலை மாற்றத்தால் பருவ மழை எப்போது பெய்யும், என்ன பயிரிடுவது என்ற குழப்பத் திலேயே விவசாயிகள் உள்ளனர். பருவநிலை மாற்றத்தின் காரண மாக மழை பெய்யக்கூடிய பரு வத்தில் மழை பொய்த்துப் போவ தும் மழை பெய்யாத காலங்களில் மழை பெய்து விவசாயத்தைப் பாதிப்பதும் தற்போது நடை பெறுகிறது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களிலும், அரிய லூர் உள்ளிட்ட மத்திய மண்டல மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருவது பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சத்தை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவது டன், அதைச் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி யிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்னும் நிலை மாறி, தற்போது தை மாதத்தில் மழை பெய்து வருவது, இயற்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்றே கூறலாம். தற்போது, புயல் வந்தால் மட்டுமே மழை பெய்யும் என்ற கருத்து மக்களிடம் உள்ள நிலையில் இந்த மாற்றம், எந்தப் பட்டத்தில் எதைச் சாகுபடி செய்வது என்ற கேள்வியும் குழப்பமும் விவசாயிகளிடம் உள்ளது.

இதுகுறித்து அரியலூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராமையன் கூறியபோது, “ஆடியில் பெய்யும் மழை விவசாயத்துக்கு உயிரூட்டும் வகையில் அமையும். ஆனால், தற்போது அனைத்தும் மாறிவிட்டது. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றாற்போல விவசாயிகளும் மாற வேண்டியுள்ளது. எனவே, இந்த பருவநிலை மாற்றத்தை அறிவியல் விஞ்ஞானிகள் கணித்து முன்கூட்டியே விவசாயிகளுக்கு அறிவித்தால் அதற்கு ஏற்றவாறு பயிர் சாகுபடி செய்ய முடியும்” என்றார்.

புவியியலாளர் எம்.சந்திரசேகர் கூறியபோது, “ஆடி மாதத்தில் விதைக்க வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது தை மாதத்தில் மழை வருவது மிகப்பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. பனி உருகி கடல்மட்டம் உயர்ந்து கடல் உள்வாங்குவதும், வெளிவாங்குவதும், கண்டங்கள் பலவகையாக பிரிவதும் தொடர்வதால் பூமியின் தட்பவெப்ப நிலை தொடர்ந்து மாறி வருகிறது. வரும் காலங்களில் பருவநிலையில் இன்னும் அதிக மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அதனைத் தவிர்க்க அறிவியலாளர்கள், வேளாண் வல்லுநர்கள், புவியியலாளர்கள் இணைந்து, பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற பயிர்களை, அதற்கு உரிய காலத்தில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x