Published : 01 Feb 2017 08:22 AM
Last Updated : 01 Feb 2017 08:22 AM

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மே 7-ல் ‘நீட்’ தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

தனியார் மருத்துவக் கல்லூரி களில் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங் களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2017-18ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-நீட்) மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் நேற்று இரவு அறிவித்துள்ளது. டிசம்பர் 31-ம் தேதி முதல் (நேற்று) ஆன்லைனில் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண் ணப்பிக்கலாம். மார்ச் 1-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு எழுதும் விண் ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 25 வயது வரை யிலும் மற்றும் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 30 வரையிலும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 8 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், உயிரி யல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் இருந்து 180 கேள்விகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் (கொள்குறி) வகையில் சரியான விடையை தேர்வு செய்யும் முறையில் வினாத்தாள் இருக்கும்.

நாடு முழுவதும் சுமார் 80 நகரங்களில் 1,500 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த ஆண்டு இரு கட்டங் களாக நடந்த நீட் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்திருந் தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இவர்களின் 4,09,477 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக் கது. நீட் தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.cbseneet.nic.in இணையதளத்தை மாண வர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x