Published : 02 Jun 2017 08:50 AM
Last Updated : 02 Jun 2017 08:50 AM

கருணாநிதி பிறந்த நாள் விழா: சென்னையில் ஏற்பாடுகள் தீவிரம்- சட்டப்பேரவை வடிவில் மேடை அமைப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை (ஜூன் 3) மாலை 5 மணிக்கு நடை பெறவுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள், ராயப்பேட்டை ஒய்எசிஏ மைதானத் தில் கடந்த 2 வாரங்களாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கருணாநிதி சட்டப்பேரவை உறுப் பினராகி 60 ஆண்டுகள் நிறை வடைவதால் சட்டப்பேரவை வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு எதிரே பார்வையாளர்கள் அமர மிகப் பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள் ளது. சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் விழாவுக் கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

இந்த விழாவுக்காக செய்யப் பட்டு வரும் ஏற்பாடுகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர். மேடை, பந்தல் அமைக்கும் பணி கள், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்ட ஸ்டாலின் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்படி பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x