Published : 31 Jul 2016 09:59 AM
Last Updated : 31 Jul 2016 09:59 AM

உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை: பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் இல்லை

மாணவர்களிடம் குறைந்து வரும் உடல், மன வலிமை

விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பது தான் உடற்கல்வியின் பிரதான நோக்கம். வெற்றி, தோல்வியெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஆனால், படிப்புதான் முதல் நோக்கம். விளையாட்டு, உடற் பயிற்சி என்பதெல்லாம் இரண் டாம் பட்சம்தான் என்று ஆகிவிட்ட நிலையில், அதுகூட மாணவர்களுக்கு பள்ளிகளில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களை விளையாட விடாததால், அவர்களின் மனநிலை தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. விளையாட்டில் தோல் வியைத்தான் முதலில் சந்திப் பார்கள். இந்தத் தோல்வி, மாண வர்களுக்கு அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என மன பலத்தை அதிகரிக்க வைக்கிறது. கடந்த காலத்தில் இந்த வகுப்புகளில் விளையாட்டுக்கும், உடற்பயிற் சிக்கும் முக்கியத்துவம் தரப்பட்டன.

தற்போது மதிப்பெண் கல்விக்கே முக்கியத்துவம் என்ற ஒட்டுமொத்த பெற்றோர், பள்ளிகளின் எதிர் பார்ப்புகள் மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால், விளையாட்டு மைதானங்களும், உடற்பயிற்சி கல்வியும், அத்துடன் மாணவர்களின் மன பலமும் குறைந்து வருவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் 36,956 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 11,462 அரசு உதவி பெறும் தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. 8,407 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 1 கோடியே 33 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 5 லட்சத்து 9 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 3,500 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மொத்த ஆசிரி யர்களைக் கணக்கிடும்போது ஒரு சதவீதம்கூட உடற்கல்வி ஆசி ரியர்கள் இல்லை.

மாணவர் விகிதாச்சாரப்படி உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. அரசு நிர்ணயித்துள்ள பணி யிடங்களின்படியே தமிழகத்தில் 435 உடற்கல்வி ஆசிரியர்கள், 43 கிரேடு-2 உடற்கல்வி ஆசிரியர்கள், 39 கிரேடு-1 உடற்கல்வி ஆசி ரியர்கள் பணியிடங்கள் காலி யாக இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பள்ளி கள், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன. அந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி யிடமே உருவாக்கப்படவில்லை. இருக்கும் ஆசிரியர்களை மற்ற பணிகளுக்கு பயன் படுத்துகின்றனர்.

மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட, மண்டல, மாநில அள விலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளே தற்போது இப்போட்டிகளில் மாணவர்களை தயார்படுத்தி போட்டிகளில் பங்கேற்கச் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கான மைதானங்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. முன் பெல்லாம் பள்ளி ஆண்டுவிழா காலங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தற்போது அவை பெயரளவுக்கே நடத்தப்படுகின்றன என்றனர்.

விளையாட விடுவதில்லை

பள்ளிகளில் நான்கு பிரிவுக ளாக விளையாட்டுகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஏ பிரிவில் கால்பந்து, கபடி, ஹாக்கி, கோகோ, வாலிபால், பேஸ்கட் பால் உள்ளிட்ட விளையாட்டுகளும், பி பிரிவில் டேக்வாண்டோ, குத்துச்சண்டை, நீச்சல், சிலம்பம், ஜூடோ, கேரம், பீச் வாலிபால், சைக்கிளிங் போன்ற விளையாட்டுகளும், சி பிரிவில் ஓடுதல், தாண்டுதல், தவ்வுதல், எறிதல் போன்ற தடகள விளையாட்டுகளும், டி பிரிவில் சதுரங்கமும் உள்ளன. தற்போது மாணவர்களுக்கு கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம் இருக்கிறது.

பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால், பந்து கொடுத்து விளையாட விடுவதில்லை. விளையாட்டால் படிப்பு பாதிக்கப்படும் என்று 10, பிளஸ் 2 மாணவர்களை விளையாட விடுவதில்லை. மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்களிடம் பந்து கொடுத்து விளையாட விடுங்கள் என கெஞ்சும் நிலைதான் பள்ளிகளில் உள்ளது. அதற்கான வாய்ப்பு இல்லாததால், மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைந்து சினிமா, இன்டர்நெட், ஃபேஸ்புக், செல்போன் உள்ளிட்டவை மீதான மோகம் அதிகரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x