Last Updated : 13 Dec, 2013 12:00 AM

 

Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கு பரிந்துரை

தமிழகம் முழுவதும் 230 எஸ்.ஐ.க்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோல 180 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் டி.ஜி.பி.

கட்டுப்பாட்டின் கீழ் நான்கு காவல் மண்டலங்களில், ஏழு மாநகர ஆணையர் அலுவலகம், 32 மாவட்ட காவல் அலுலகம் இயங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பத்து ஆண்டுகளாக பணியாற்றிவரும் எஸ்.ஐ.கள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்படும். கடந்த 2001-ம் ஆண்டு பேட்ஜில் பணியில் சேர்ந்த எஸ்.ஐ.க்கள் பத்து ஆண்டுக்கு மேல் பணி முடித்த நிலையில், பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பதவி உயர்வுக்குக் காத்திருப்பு

இந்தாண்டு மாநிலம் முழுவதும் 230 எஸ்.ஐ.க்கள் பத்தாண்டு வரை பணி நிறைவு செய்து, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். டி.ஜி.பி. அலுவலகம் மூலம் இவர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு, பதவி உயர்வுக்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.க்கள் பதவி உயர்வு அளிப்பதன் மூலம் காலியாகும் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும். கடந்த இரண்டு நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதா என்பது குறித்தும், போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவான வழக்கு விவரங்கள், மீட்கப்பட்ட சொத்து மதிப்பு, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காவல்துறைக்கு தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் தேவைகள் குறித்து மாநாட்டில் கலந்தாலோசிக்கபட்டது.

அரசிடம் பரிந்துரை

தற்போது, மாநிலம் முழுவதும் 230 எஸ்.ஐ.க்கள், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்க அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையம் மற்றும் பல்வேறு யூனிட்டுகளில் மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிவரும் 180 இன்ஸ்பெக்டர்கள், இடமாற்றம் செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாடு முடிந்ததும், இந்த பணியிட மாற்றம் மற்றும் எஸ்.ஐ.களுக்கான பதவி உயர்வு கிடைக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x