Published : 08 Mar 2017 07:37 AM
Last Updated : 08 Mar 2017 07:37 AM

கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீர் குடிக்க உகந்ததே: தினமும் 30 மில்லியன் லிட்டர் எடுக்க குடிநீர் வாரியம் திட்டம்

சென்னை புறநகரில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழை நீர், குடிக்க உகந்தது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த குவாரிகளில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் வீதம் 100 நாட்களுக்கு குடிநீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பருவமழை பொய்த்த நிலையில், சென்னைக் கான குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் 4 ஏரிகளும் வறண்டு வருகின்றன. அதனால் சென்னை குடிநீர் வாரியம், தினந்தோறும் குடிநீர் வழங்கும் அளவை 850 மில்லியன் லிட்டரில் இருந்து, 550 மில்லியன் லிட்டராக குறைத்து விநியோகித்து வருகிறது. வீராணம் ஏரி வறண்டதால், அங்கிருந்து கிடைத்து வந்த 180 மில்லியன் லிட்டர் நீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

தேவையை சமாளிக்க, பரவனாறு மற்றும் நெய்வேலி நீர்ப்பரப்பு பகுதியிலிருந்து நீர் கொண்டு வருவது, கிருஷ்ணா நதி நீரை பெறுவது, பழுதடைந்த கை பம்புகளை சீர் செய்வது போன்ற பணிகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், சென்னை புறநகரில் மாங்காடு பகுதியில் 22 குவாரிகளிலும், திருநீர்மலையில் 3 குவாரிகளிலும், பம்மலில் 3 குவாரிகளிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியிருப்பதை சென்னை குடிநீர் வாரியம் கண்டறிந் துள்ளது. அந்த குவாரிகளில் நீர் இருப்பு குறித்தும், குடிக்க உகந்ததா என்பது குறித்தும் குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் நீர் மாதிரி எடுத்து பரிசோதித்தனர். பரிசோதனை முடிவில், அந்த நீர் குடிக்க உகந்ததுதான் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய தலைமை அலு வலக மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

கடந்த 2013-ம் ஆண்டே, இந்த குவாரிகளை கண்டறிந்து, குடிநீர் எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதற் குள் மழை வந்துவிட்டதால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது தேவை ஏற்பட்டுள்ளதால், அந்த திட்டத்தில் தீவிரம் காட்டி வருகி றோம். அந்த குவாரிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர்

பரிசோதிக்கப்பட்டதில், குடிக்க

உகந்தது என சான்றளிக்கப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதியை அசுத்தம் செய்யாத வாறு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

முதல்கட்டமாக மாம்பாக்கம் பகுதியில் உள்ள 22 குவாரிகளில் உள்ள நீரை, தினமும் 25 மில்லியன் லிட்டர் முதல் 30 மில்லியன் லிட்டர் வரை மோட்டார் மூலம், செம்பரம்பாக்கத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்ல இருக்கிறோம். அங்கு நீர் சுத்திகரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படும். இவ்வாறு 100 நாட்களுக்கு குவாரி

களில் இருந்து நீர் எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். அந்த குவாரிகளில் தோராயமாக 3 ஆயிரம் மில்லியன் லிட்டர் (0.10 டிஎம்சி) குடிநீர் இருக்கலாம் என கணக்கிட்டு இருக்கிறோம். இந்த நடவடிக்கை, சென்னையில் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x