Published : 05 Feb 2014 06:25 PM
Last Updated : 05 Feb 2014 06:25 PM

மதுரை மக்களின் தூக்கத்தைத் தொலைத்தது குடிநீர்: அதிகாலை 3 மணி முதல் இரவு 12.30 வரை பகுதி வாரியாக விநியோகிப்பதாக மாநகராட்சி அறிவிப்பு

மதுரை மாநகராட்சியில் சுழற்சி முறையில் 4 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் இரவு 12.30 மணி வரை விநியோகம் செய்வதால், பொதுமக்கள் தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வைகை அணையின் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதால் மதுரை மாநகரின் பழைய 72 வார்டுகளில் 4 நாளுக்கு ஒருமுறை சுழற்சிமுறையில் குடிநீர் விநியோகிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான சுழற்சி முறை குடிநீர் விநியோகம் பிப்.6 முதல் தொடங்குகிறது. எந்த நாள், எந்த நேரத்தில் குடிநீர்வரும் என்பது பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

முதல்நாள்

முதல் நாளான பிப். 6-ம் தேதி அதிகாலை 4 முதல் 7 மணி வரை கோச்சடை-1, பெத்தானியாபுரம், முத்துநகர், பூஞ்சோலை நகர், லோக்நகர், நடராஜ் நகர், இந்திராநகர், கணேசபுரம், முடக்குச்சாலை, மேட்டுத்தெரு, அண்ணா மெயின் வீதி, பல்லவன் நகர், பாண்டியன் நகர், ஐஎன்யூடிசி காலனி ஆகிய பகுதிகளுக்கும், 7 மணி முதல் காலை 10.30 மணி வரை ஞாயிற்றுக்கிழமை சந்தை, மேலமாசிவீதி, கிருஷ்ணராயர் தெப்பம், டி.வி. லேன், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காக்காத்தோப்பு, குட்ஷெட் தெரு, நாடார் சந்து, அக்ரஹாரம் மணி ஐயர் ஸ்காட் ரோடு, மணிநகரம், கனகவேல் காலனி, பேச்சியம்மன் படித்துறை ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.

மேலவாசல்

பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெரியார் பஸ் நிலையம், திடீர்நகர், மேலவாசல், பெருமாள் கோவில், கட்ராபாளையம், நேதாஜி ரோடு, காஜிமார் தெரு, குப்புபிள்ளை தோப்பு பாண்டிய வேளாளர் தெரு, பள்ளிக்கூடத்தெரு, மீனாட்சி தியேட்டர், எப்எப் ரோடு, மேலமாசி வீதி, தெற்கு ஆவணி மூல வீதி ஆகிய பகுதிகளிலும் மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோச்சடை-2, விராட்டிபத்து, முத்துதேவர் காலனி, ஜெய்நகர், எச்எம்எஸ் காலனி, ஆனந்த்ராஜ் நகர், இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால் நகர், அங்களா ஈஸ்வரி நகர் ஆகிய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

டிஆர்ஓ காலனி

அதேபோல் வடகரை பகுதியில் அதிகாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை அருள்தாஸ்புரம் மேல்நிலைத்தொட்டி பகிர்மானப் பகுதிகள், அசோக் நகர், தத்தனேரி கிழக்கு மெயின்ரோடு, பெரியசாமி கோனார் தெரு ஆகிய பகுதிகளிலும், 6.30 மணி முதல் 2.30 மணி வரை ரிசர்வ் லைன் மேல்நிலைத்தொட்டி, ராஜாஜி தெரு, காமராஜர் தெரு, மூவேந்தர் தெரு பகிர்மானப் பகுதிகள், பிபி குளம், அம்பேத்கார் காலனி, முல்லைநகர், தனபால் பள்ளி, புலித்தேவன் தெரு, டிஆர்ஓ காலனி, அண்ணா தெரு, முனியாண்டி கோயில் தெரு ஆகிய இடங்களிலும், மதியம் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பாரதிதாசன் தெரு, அழகாபுரி, வ.உ.சி. தெரு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி தெரு, பூமி உருண்டை தெரு, அய்யனார் கோயில் தெரு, அகிம்சாபுரம், பூந்தமல்லி நகர், ஜீவா தெரு, போஸ் வீதி, 50 அடி, 60 அடி ரோடு, சிவகாமி தெரு, தாஹூர் நகர், குலமங்கலம் மெயின்ரோடு ஆகிய பகுதிகளிலும், இரவு 8.30 முதல் 12.30 மணி வரை சுந்தராஜபுரம், மேல்நிலைத்தொட்டி, டிவிஎஸ் நகர், கோவலன் நகர், முத்துப்பட்டி, ஆண்டாள்புரம், பழைய மீனாட்சி மில் காலனி பகுதியிலும் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாளான பிப். 7-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை ஆரப்பாளையம், பிள்ளைமார் தெரு, கோமாஸ்பாளையம், ஹார்விநகர், ஏஏ ரோடு கண்மாய் கரை, முன்சிபாளையம், ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம், மோதிலால்தெரு, கரிமேடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, பொன்னகரம் பகுதிகள். காலை 7 மணி முதல் 10.30 மணி வரை தமிழ்சங்கம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, பேச்சியம்மன் படித்துறை ரோடு, வடக்குமாசி வீதி, வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மேல ஆவணி மூல வீதி, தாசில்தார் பள்ளிவாசல், மீன்காரத் தெரு, எம்எம்சி காலனி, அக்ரஹாரம், கோவிந்தன் செட்டி தெரு, அனுமார்கோயில் படித்துறை, திருமலைராயர் படித்துறை, கீழப்பட்டமார் தெரு, தைக்கால் தெருக்கள் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

ஜெய்ஹிந்த்புரம்

பகல் 1 மணி முதல் 6.30 மணி வரை டிபி டேங்க் 2-வது பகிர்மானம், சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின்ரோடு, எம்.கே.புரம், செட்டியூரணி, எம்சிசி காலனி, எம்.கே.புரம் மெயின்ரோடு, ஜெய்ஹிந்த்புரம் 1-வது மெயின்ரோடு ஆகிய பகுதிகளிலும், மாலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை கோச்சடை 3-வது பகிர்மானம், சம்மட்டிபுரம், எம்.எம்.நகர், வெள்ளச்சாமி தியேட்டர் நகர், சொக்கலிங்க நகர் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

ரிசர்வ் லைன்

வடகரை பகுதியில் அதிகாலை 3.30 மணி முதல் அருள்தாஸ்புரம், ஆழவாய் நகர், செங்கோல் நகர், மீனாட்சி நகர், அய்யனார் காலனி, தத்தனேரி மெயின்ரோடு ஆகிய பகுதிகளிலும், காலை 6.30 மணி முதல் 2.30 மணி வரை ரிசர்வ் லைன், காலங்கரை, வண்டிப்பாதை, பிடிஆர் நகர், வள்ளுவர் காலனி, பழனிச்சாமி நகர், ஜவகர்புரம், கிருஷ்ணபுரம் காலனி, சொக்கநாதபுரம், பாரதி நகர், நாராயணபுரம், ஜே.என் நகர், விஸ்வநாதபுரம், விசலாச்சிபுரம், பழைய நத்தம் ரோடு ஆகிய பகுதிகளிலும், மதியம் 2.30 மணி முதல் 8.30 மணி வரை தபால்தந்தி நகர், மீனாட்சி நகர், வள்ளுவர் காலனி, வாசுகி நகர், குரு நகர் ஆகிய பகுதிகளிலும், பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சிங்கராயர் தெரு, காக்காத்தோப்பு ஆகிய பகுதிகளிலும், இரவு 8 மணி முதல் 12.30 மணி வரை சுந்தரராஜபுரம், சோலை அழகுபுரம், பாரதியார் தெரு, ஆகிய இடங்களிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

மூன்றாம் நாள்

3-வது நாளான பிப். 8-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரை கீழமாரட் 1-வது பகிர்மானம், தாசில்தார் பள்ளிவாசல் தெரு, ஆட்டுமந்தை பொட்டல், கீழமாரட் வீதி, கரிம்பள்ளிவாசல், சுங்கம் பள்ளிவாசல், காயிதே மில்லத் தெரு, இஸ்மாயில்புரம், அருணாச்சலபுரம், கீழவெளிவீதி, லெட்சுமிபுரம், கான்பாளையம் மற்றும் குறுக்குத் தெருக்களிலும், 9 மணி முதல் 10 மணி வரை அரசரடி மேல்நிலைத்தொட்டி, துரைச்சாமி நகர், வேல்முருகன் நகர் பகுதிகளிலும், 9 மணி முதல் 2 மணி வரை பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி, வசந்தநகர் 4-வது தெரு, திருவள்ளுர் நகர் அக்ரஹாரம், தண்டைக்காரன்பேட்டை ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

வாழைத்தோப்பு

மாலை 3 மணி முதல் 6 மணி வரை அரசரடி மேல்நிலைத்தொட்டி சத்தியமூர்த்தி நகர், ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி, தெற்குமாசி வீதி, தெற்குப்பெருமாள் மேஸ்திரி வீதி, காமாட்சியம்மன் கோயில் தெரு, முத்தையா பிள்ளை தெரு, ஜடாமுனிகோயில் தெரு, மஹால், சின்னக்கடைத் தெரு, பந்தடி தெரு, கான்சா மேட்டுத்தெரு, தெற்கு ஆவணி மூலத்தெரு, ஓதுவார் தெரு, வெண்கலக்கடை தெரு, சப்பாணி கோயில் தெரு, காஜா தெரு பகுதிகளிலும், மாலை 6 மணி முதல் 11 மணி வரை ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி, சிந்தாமணி ரோடு, நாகுப்பிள்ளை தோப்பு, வாழைத்தோப்பு, கிருஷ்ணாபுரம், பச்சரிசிக்கார தெருக்கள், பாலுச்சாமி ஐயர் தெரு, புதிய மாகாளிப்பட்டி ரோடு, ராமசத்திரம் குறுக்குத் தெருக்களில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட உள்ளது.

செல்லூர்

வடகரைப் பகுதியில் அதிகாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை ரேஸ்கோர்ஸ், மருதுபாண்டியர் மெயின்ரோடு, குறுக்கு, வடக்குத்தெரு, பாண்டியன் தெரு, கட்டபொம்மன் தெரு, ராமமூர்த்தி தெரு ஆகிய இடங்களிலும், அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை செல்லூர், மேலத்தோப்பு, கீழத்தோப்பு, புதுத்தெரு பகுதிகளிலும், பகல் 2.30 மணி முதல் 7 மணி வரை அகிம்சாபுரம், இருதயபுரம் பகுதிகளிலும், அதிகாலை 6 மணி முதல் 3 மணி வரை புதூர், சிங்காரவேலன் தெரு, பாரதி உலா தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கணேசபுரம், மாதா கோயில் மெயின்ரோடு, உலகநாதன் சேர்வை தெரு, பாரதியார் மெயின்ரோடு, ஐ.டி.ஐ மெயின்ரோடு, சிட்கோ காலனி தெரு ஆகிய பகுதிகளிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை மருதங்குளம், கற்பகநகர், பாரத் நகர், கொடிக்குளம், சம்பக்குளம், சூரியா நகர், சங்கர் நகர், ராஜாஜி பூங்கா, ஷா தியேட்டர், குருவிக்காரன் சாலை, தல்லாகுளம், அழகர்கோவில் ரோடு, ஆழ்வார்புரம், பனகல் சாலை, செனாய்நகர் ஆகிய இடங்களிலும், அதிகாலை 6 மணி முதல் 12 மணி வரை அண்ணாநகர், சாத்தமங்கலம் பகுதிகளிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை கோரிப்பாளையம், சொக்கிகுளம், ராமமூர்த்தி தெரு ஆகிய பகுதிகளிலும், இரவு 7 மணி முதல் 12.30 மணி வரை சுந்தராஜபுரம், என்.எஸ்.கோனார் தெரு, நேதாஜி தெரு, வீரகாளியம்மன் தெரு, ஜீவாநகர் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் அளிக்கப்படுகிறது.

நான்காம் நாள்

4-வது நாளான பிப். 9 அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டி, எல்லீஸ்நகர், எஸ்எஸ் காலனி, மாப்பாளையம், அன்சாரி நகர் பகுதிகளிலும், காலை 8 மணி முதல் 2 மணி வரை பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி 2-வது பகிர்மானம், பசும்பொன் நகர், கீழத்தெரு, மருதுபாண்டியர் தெரு, பழங்காநத்தம், நேரு நகர், மாடக்குளம், வி.கே.பி நகர், வடக்குத் தெரு பகுதிகளிலும் விநியோகிக்கப்படுகிறது.

மதியம் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி 2வது பகிர்மானம், தென்னை ஓலக்காரத் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்குமாரட் வீதி, தெற்கு வெளி வீதி, நாடார் வித்தியாசாலை, மீன் கடை, கு.கு.ரோடு, மஹால் மற்றும் பந்தடி தெருக்களிலும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி, சன்னியாசியூரணி மேல்நிலைத்தொட்டி, காமராஜர்புரம் பகுதிகள், பாலரங்காபுரம், சின்னகண்மாய் பகுதிகள், பங்கஜம் காலனி, தெப்பக்குளம் பகுதிகள், தமிழன் தெரு, மீனாட்சி நகர், அனுப்பானடி, நரசிம்மபுரம், நவரத்தினபுரம், சீனிவாச பெருமாள் கோயில் தெரு, ரசாயன பட்டறை, கீழ சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.

கரும்பாலை

வடகரை பகுதியில் வல்லபாய் ரோடு, ஜவகர் ரோடு, காக்கைபாடினியார் பள்ளி, ராமமூர்த்தி ரோடு, பாரதி உலா வீதி, சிங்கராயர் காலனி, நரிமேடு மெயின்ரோடு, பிடிஆர் ரோடு, பிபி குளம், பெசன்ட் ரோடு ஆகிய பகுதிகளிலும், அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை செல்லூர், சுயராஜ்யபுரம், பந்தல்குடி, அகிம்சாபுரம் பகுதிகளிலும், மதியம் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அகிம்சாபுரம் தெருக்கள், பெரியார் தெரு, மேலத்தெரு பகுதிகளிலும், காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அழகர் நகர், கற்பக நகர், லூர்து நகர், ராமலட்சுமி நகர், காந்திபுரம், பெரியார் நகர், கன்னிமாரியம்மன் கோவில் தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகளிலும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நரிமேடு, சாலை முதலியார் தெரு, தாமஸ் வீதி, சின்ன சொக்கிகுளம், சாரோஜினி தெரு, கமலா தெரு, கோகலே ரோடு, பி.டி.காலனி, இந்திரா நகர், சாலமுத்து தெரு, கரும்பாலை கிழக்கு, காந்திநகர் ஆகிய பகுதிகளிலும் அதிகாலை 6 மணி முதல் 12 மணி வரை மகாத்மா காந்தி தெருக்கள், பழைய எல்ஐசி காலனி, புதிய எல்ஐசி காலனி, ஏரிக்கரை ரோடு, மானகிரி, துணை ஆட்சியர் காலனி, காமராசர் காலனி ஆகிய பகுதிகளிலும், மாலை 5 மணி முதல் 7மணி வரை கோரிப்பாளையம், சொக்கிகுளம், அண்ணாநகர் பகுதிகளிலும், மாலை 7 மணி முதல் இரவு 12.30 மணி வரை சுந்தர்ராஜபுரம், நல்லமுத்துப் பிள்ளை, மேலத்தோப்பு, லாடபிள்ளை, காளியமமன் கோவில் தெரு, கிழக்குத் தெரு, மணிகண்டன் நகர், பாரதியார் தெரு, நந்தவனம், வில்லாபுரம் மெயின்ரோடு ஆகிய பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

முதல் சுற்று முடிந்தபின் வரிசைப்படி அடுத்தடுத்த சுற்றுகளில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x