Published : 20 Feb 2014 03:06 PM
Last Updated : 20 Feb 2014 03:06 PM

மூவர் விடுதலை பிரச்சினைக்கு ஜெயலலிதா அரசின் திறமையின்மையே காரணம்: கருணாநிதி

செயல்திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால், முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள் கூட முடங்கும் என்று, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் நிருபர்களுக்கு வியாழக் கிழமை அளித்த பேட்டி:

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை ஆவதை, உச்ச நீதிமன்றம் தடை செய்திருக் கிறதே? தமிழக அரசு சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக் கிறதே?

நான் சொல்கிற ஒரே பதில் “முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர், திறப்பா டிலாஅ தவர்” (முறைப்படித் தீட்டப்படும் திட்டங் கள் கூடச் செயல் திறன் இல்லாத வர்களிடம் சிக்கினால் முழுமை ஆகாமல் முடங்கித்தான் போகும்) என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட் டாகத்தான், இந்தப் பிரச்சினையிலே சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருடைய விடுதலைப் பிரச் சினையில், ஜெயலலிதா தலைமை யிலே உள்ள அரசு நடந்து கொண் டிருக்கிறது.

ஆனால் அந்த அம்மையா ருடைய (ஜெயலலிதாவின்) அறிக்கையில், தேவையில்லாமல் திமுகவை பிறாண்டியிருக்கிறார். நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்களுக்கும் சொல்லுகின்றேன்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நளினி பரோலில் செல்ல அனுமதி கேட்டு இந்த அரசுக்கு விண்ணப் பித்தபோது, அதை ஏற்க மறுத்து, முடியாது என்று பதில் கூறி விட்டவர்தான் ஜெயலலிதா என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

திமுகவும், அதிமுகவும் இந்திய இறையாண்மையை சூறையாடுவ தாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியிருக்கிறாரே?

ஞானதேசிகனைப் பற்றியெல் லாம் பேசுவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரியவனல்ல.

மதுரவாயல், துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து, இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறதே?

திமுக ஆட்சியும், மத்திய அரசும் கலந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டம் மதுரவாயல் திட்டம். அந்தத் திட்டத்தை பொறாமையின் காரணமாகவோ அல்லது வழக்க மான அதிமுகவின் குறிப்பாக ஜெய லலிதாவின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ, அதை நிறைவேற் றாமலே தள்ளிப் போட்டுவிட்டார்.

அது சம்பந்தமாக அரசின் பல செயலாளர்கள், பல விஞ்ஞானிகள், கட்டுமானப் பொறியாளர்கள் ஆகி யோர் எடுத்துச் சொல்லியும்கூட ஜெயலலிதா, அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இப்போது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் இந்த ஆணை ஜெயலலிதாவுக்கு பெரிய மூக்கறுப்பு என்று சொல்லலாம்.

வேட்பாளர் நேர் காணல் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணி பற்றி முடிவு செய்துவிட்டீர்களா?

நேர்காணல் நடக்கும்போதே கூட்டணி பற்றி முடிவு செய்வதை எங்கேயாவது பத்திரிகை உலக வரலாற்றில் கண்டிருக்கிறீர்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x