Published : 01 Feb 2017 10:34 AM
Last Updated : 01 Feb 2017 10:34 AM

ராணிப்பேட்டையில் தீ விபத்துக்குள்ளான ரசாயன தொழிற்சாலை பகுதியில் ஆய்வு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதி 3-ல் பெயின்ட் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்யும் ரசாயன தொழிற் சாலை (குஜராத் என்வைரோ புரொடக்‌ஷன் அண்ட் இன்ஃப்ராஸ்ட் ரக்சர் லிமிடெட்) இயங்கி வருகிறது. குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த ஆலையில் இருந்து, சிமென்ட் தொழிற்சாலைகளுக்குத் தேவை யான மூலப்பொருட்கள் தயாரிக் கப்படுகின்றன.

இந்தத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 60 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் 8 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். எனினும் தொழிற்சாலையில் இருந்து வெளி யேறிய ரசாயனப் புகையால் அருகில் உள்ள கிராம மக்கள் சுவாசப் பிரச்சினையால் திணறினர்.

வடமேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜய குமார் கூறும்போது, “தீ விபத் துக்கு மின் கசிவுதான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்தி உள்ளோம். தற்போது புகை மட்டும் வெளியேறுகிறது. ‘பொக்லைன்’ இயந்திரங்கள் மூலம் புகை ஏற் படக் காரணமான கழிவுகளை அகற்றி தண்ணீரை ஊற்றி வரு கிறோம்” என்றார்.

இந்தத் தொழிற்சாலை முழுவ தும் எரிந்ததால், சுற்றியுள்ள பகுதி களில் புகை சூழ்ந்து காற்று பெருமளவு மாசடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வேலூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அசோகன் கூறும்போது, “தீ விபத்து ஏற்பட்டது முதல் காற்று மாசு குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அதன் முடிவு தெரியவந்த தும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைக்கு நோட்டீஸ் வழங்குவது குறித்தும் முடிவு செய்யப்படும்’’ என்றார்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ் கூறும்போது, “தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து 5 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் கிராமங்களில் பாதிப்பு கள் குறித்து புதன்கிழமை (இன்று) முதல் 4 குழுவினர் ஆய்வு நடத்துவர். ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர் களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் அதன்பிறகு முடிவு செய்யப்படும்’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x