Published : 26 Jan 2014 11:44 AM
Last Updated : 26 Jan 2014 11:44 AM

குடியரசு தின விழா: சென்னையில் கொடியேற்றினார் ஆளுநர்

65-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரைச்சாலையில் காந்தி சிலை அருகே காலை 8 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஆளுநர் கே.ரோசய்யா தேசியக்கொடியை ஏற்றினார்.

இதைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில், சாதனையாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கினார். வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் 6 பேருக்கும், காந்தியடிகள் காவலர் பதக்கம் காவல்துறையினர் 4 பேருக்கும் வழங்கப்பட்டன.

அதன்பிறகு பல்வேறு அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன.

பலத்த பாதுகாப்பு

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, சென்னை குடியரசு தின விழாவுக்கு 8 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x