Published : 11 Feb 2017 07:54 AM
Last Updated : 11 Feb 2017 07:54 AM

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீர் மாற்றம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விபு நய்யார் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பொறுப்பு அதிகாரியாக தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்ட மைப்பு நிதிச் சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குநர் காகர்லா உஷா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் தலைவராக (பொறுப்பு) வியாழக்கிழமை மதியம் பொறுப் 0றபேற்றுக்கொண்டார்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள விபு நய்யார், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத் தப்பட இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தேர்வு வாரியத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், விபு நய்யார் மாற்றப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x