Published : 25 Oct 2014 10:19 AM
Last Updated : 25 Oct 2014 10:19 AM

பாரிமுனையில் ராட்சத மரம் விழுந்து பழங்கால வீடு இடிந்தது

பாரிமுனையில் ராட்சத மரம் விழுந்ததில் பழங்கால வீடு இடிந்தது. உள்ளே சிக்கிக்கொண்ட 9 பேரை தீயணைப்பு வீரர்கள் மூன்றரை மணி நேரம் போராடி மீட்டனர்.

பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் 100 ஆண்டு பழமையான மரம் ஒன்று இருந்தது. சுமார் 12 அடி சுற்றளவில், 100 அடி உயரத் துக்கும் மேல் இருந்தது. அதன் அருகில் சுண்ணாம்பு பூச்சால் கட்டப்பட்ட 2 மாடி வீடு ஒன்றும் உள்ளது. 80 ஆண்டு பழமையான இந்த வீடு யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது.

இந்த வீட்டை ஆருஷா என்பவர் தற்காலிகமாக தனது வியாபாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறார். சீவல், பாக்கு, குங்குமம் போன்ற பொருட்களை பாக்கெட்டில் அடைக்கும் வேலை இங்கு நடக்கிறது. பாரிமுனை மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த தாராபாய், லதா, சுந்தரி, ஆர்த்தி, தியாகராஜன், புவனேஸ்வரி, பாட்ஷா, உதய், சீதாராமன் ஆகிய 9 பேர் நேற்று காலை இந்த வீட்டின் ஒரு அறையில் அமர்ந்து பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டை ஒட்டி யிருந்த ராட்சத மரம் திடீரென பயங்கர சத்தத்துடன் வீட்டின் வாசல் பகுதியை அடைத்த வாறு விழுந்தது. இதில் வீட்டின் முன்பகுதி இடிந்தது.

அதிர்ஷ்ட வசமாக, பணியா ளர்கள் இருந்த அறை சேதம் அடையவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் காயமின்றித் தப்பினர். வாசல் கதவை அடைத்தபடி மரம் கிடந்ததால் அவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அருகே உள்ள 5 மாடி கட்டி டத்தின் வழியாக சென்று, ஏணி மூலம் அந்த வீட்டில் இறங் கினர். அறைக்குள் சிக்கியிருந்த 9 பேரும் பத்திரமாக மீட்கப் பட்டனர். தீயணைப்பு வீரர் களை அப்பகுதியினரும் வியா பாரிகளும் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x