Published : 03 Dec 2013 08:12 AM
Last Updated : 03 Dec 2013 08:12 AM

ஏற்காடு தொகுதியில் அதிமுக - திமுக மோதல்: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ஏற்காடு இடைத்தேர்தலையொட்டி திங்கள்கிழமை நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அ.தி.மு.க. - தி.மு.க., தொண்டர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கொடி கம்பத்தை காப்பாற்ற அதை பிடுங்கியபோது, மின்சாரம் பாய்ந்து திமுக மாணவரணி நிர்வாகி உயிரிழந்தார். மோதலில் 2 அ.தி.மு.க.வினர் காயமடைந்தனர்.

ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதையொட்டி திங்கள்கிழமை காலை முதலே இறுதிக்கட்ட பிரச்சா ரம் சூடு பிடித்திருந்தது. அ.தி.மு.க. அமைச்சர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், திங்கள்கிழமை காலை நீர்முள்ளிக்குட்டை, கருமந்துறை, வாழப்பாடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். கருமந்துறை பஸ் நிலையம் அருகே ஸ்டாலின் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேநேரம் கருமந்துறையில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச் சர் மோகன் தலைமையில் அ.தி.மு.க. வினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று, 12 பூத்களுக்கு உள்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது, கருமந்துறை பஸ் ஸ்டாண்டு அருகே ஸ்டாலினை, கும்பமரியாதையுடன் வரவேற்க மகளிரணியினர் சாலையின் இரண்டு பக்கமும் திரளாக நின்றிருந்தனர். தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க குவிந்து இருந்தனர்.

அ.தி.மு.க.வினர் அத்துமீறல்

இதனால், பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போலீஸார் அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் கட்சித் தொண்டர்கள் அந்த பகுதியில் பிரச்சாரம் செல்லாமல் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அ.தி.மு.க.வினர் காவல் துறையினர் பேச்சை கேட்காமல் கருமந்துறை பஸ் நிலையப் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டுச் சென்றனர்.

இதை தி.மு.க.வினர் கண்டித்து கோஷம் எழுப்பி, தகராறு செய்தனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அ.தி.மு.க. அமைச்சர் மோகன் ஆகியோர் தத்தம் கட்சி தொண்டர்கள் தகராறில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்த முயன்ற னர். ஆனால், வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் விழுப்புரம் மாவட்டம் திரு வநல்லூர் அ.தி.மு.க. இளைஞர் பாசறை ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் (29), கல்ராயன்மலை அ.தி.மு.க. இளைஞர் பாசறை ஒன்றியச் செயலாளர் பழனிவேல் (28) ஆகியோர் காய மடைந்தனர்.

ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர், தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பு இருந்த ஸ்டாலின் பேனர், கட்சிக் கொடியை கிழித்து எறிந்தனர். தி.மு.க. கொடி கம்பத்தை கீழே தள்ளும் முயற்சியில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி தியாகதுருகம் ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்முருகன் (35) இரும்பு கொடி கம்பத்தை பிடுங்கி பாதுகாப்பாக கட்சி அலுவல கத்துக்குள் எடுத்து வைக்க முயன்றார். அப்போது, இரும்பு கம்பம் மேலே சென்ற மின் கம்பி மீது மோதி, ராஜ்முருகன் மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த முருகனை கட்சியினர் மீட்டு கருமந்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனிடையே மோதலில் காய மடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பாஸ்கர், பழனிவேல் ஆகியோர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பாஸ்கர், கருமந்துறை காவல்நிலை யத்தில் புகார் செய்தார்.

கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.எல்.ஏ. உதயசூரியன், துரைராஜ், நிர்மல்ராஜ், ரவி உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் மீது அதிமுகவினர் புகார் அளித்தனர். கருமந்துறை காவல் நிலையத்தில் அமைச்சர் மோகன், எம்.பி.க்கள் லட்சுமணன், ஆனந்தன் உள்ளிட்ட 50 பேர் மீது தி.மு.க. நிர்வாகிகளும் புகார் அளித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து கருமந்துறை பகுதியில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x