Published : 22 Apr 2017 08:58 AM
Last Updated : 22 Apr 2017 08:58 AM

‘தி இந்து யங் வேர்ல்டு கிளப்’ சார்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் கோடைகால சிறப்பு முகாம்: பரிசுகளுடன், பயனுள்ளதாக விடுமுறையை கொண்டாட வாய்ப்பு

‘தி இந்து - யங் வேர்ல்டு கிளப்’ சார்பில் 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆன்லைன் கோடைகால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் செலவிட விரும்பும் குழந்தைகள் 30-ம் தேதிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தி இந்து’ குழுமத்தின் ‘யங் வேர்ல்டு கிளப்’ ( >http://www.youngworldclub.com) என்பது, விளை யாட்டு மூலமாக குழந்தைகள் பல்வேறு தகவல்களை கற்றுக் கொள்வது மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற் கான இணையதளமாகும். இதில் குழந்தைகள் சார்ந்த வீடியோக்கள், குழந்தைகளை சிந்திக்க வைக்கும், படிக்கத் தூண்டும் அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

8 முதல் 15 வயதினர்

இந்நிலையில், ‘யங் வேர்ல்டு கிளப்’ சார்பில் இந்த கோடையில் 4 வார ஆன்லைன் கோடைகால சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்கும் குழந்தைகள், ‘யங் வேர்ல்டு கிளப்’ இணையதளத்தில் நடத்தப்படும் பல்வேறு கற்றல், சிந்தனைத் திறன் வளர்ப்பு சார்ந்த விளையாட்டுப் போட்டிகள், வினாடி வினா போன்றவற்றில் பங்கேற்கலாம்.

நாடு முழுவதும் இருந்து இதில் பங்கேற்கும் குழந்தைகளில் அதிக பாயின்ட்கள் பெறுபவர்களுக்கு வியக்க வைக்கும் பரிசுகள் வழங் கப்படும். தவிர, ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் குழந்தை கள் இணையதளத்தில் (www.young worldclub.com) பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.99-ல் இருந்து தொடங்கு கிறது.

கோடை முகாம் மே 2-ம் தேதி தொடங்கி, மே 30-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30-ம் தேதி ஆகும். 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த ஆன்லைன் கோடைகால முகாமில் பங்கேற்று, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கொண்டாடுங்கள். பரிசுகளை வெல்லுங்கள் என்று யங் வேர்ல்டு கிளப் அழைக் கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x