Published : 13 Mar 2017 08:00 AM
Last Updated : 13 Mar 2017 08:00 AM

ரூ.100 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டப் பணிகள்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.100 கோடியில் 1,519 பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா, காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் நடக் கிறது.

தமிழகத்தில் வறட்சியை எதிர் கொள்ளவும், நீர்வள ஆதார மேலாண்மைக்காகவும் பயனீட்டா ளர்கள் பங்களிப்புடன் நீர் நிலை களை புனரமைக்கும் ‘குடிமரா மத்து’ திட்டத்துக்கு புத்துணர்வு அளிக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்த ஆண்டு 30 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பிலான 1,519 குடிமராமத்து திட்டப்பணிகள் இன்று தொடங் கப்படுகின்றன. தொடக்க நிகழ்ச்சி யாக காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் உள்ள ஏரியை சீரமைக்கும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வள ஆதாரத் துறை முதன்மை பொறியாளர் எஸ்.தினகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர் நிலைகளை புரனரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், மதகுகள் மறு கட்டுமானம், நீர் வழி களில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதர மாவட்டங்களில் அமைச் சர்கள் தலைமையில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சி யர்கள் முன்னிலையில் திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் நீர் வள ஆதாரத்துறையின் பரா மரிப்பில் உள்ள நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால்கள் சீரமைக்கப் படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x