Published : 21 Jun 2016 08:25 AM
Last Updated : 21 Jun 2016 08:25 AM

விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்கும் விவகாரம்: தனியார் நிறுவனம் பொய் பிரச்சாரம் - ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

ரியல் எஸ்டேட் அதிபர்களின் தூண்டுதலால் விவசாய நிலங்க ளில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக தனியார் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள் அதுகுறித்து வருவாய் துறையினர் ஆய்வு செய்வதுடன் மாற்றுப் பாதையில் மின்கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியை வலியுறுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின் சாரத்தை சோழிங்கநல்லூரை அடுத்த ஒட்டியம்பாக்கம் துணை மின் நிலையத்துக்கு கொண்டு வர டான் டிரான்ஸ்கோ நிறுவனம் உயர்மின் கோபுரங்களை அமைத்து வருகிறது.

இந்த மின்கோபுரங்களால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவ தாக கூறி, காயார் மற்றும் வெண் பேடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பான வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றமும் பசுமை தீர்ப்பாயமும் தள்ளுபடி செய்ததால் தனியார் நிறுவனம் மீண்டும் பணிகளை தொடங்கியது. கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி செங்கல்பட்டு கோட்டாட்சியர், போலீஸாரின் துணையோடு மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

இதனிடையே காயார் கிராம விவசாயிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், வழித்தடம் குறித்து அரசிடம் முறையாக அனுமதி பெறவில்லை எனக் கூறி, பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் தூண்டுதல் காரணமாக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பொய் யான தகவல்களை, டான் டிரான்ஸ்கோ நிறுவனம் பரப்பி வருவதால், வருவாய்த்துறையினர் நிலத்துக்கான ஆவணங்களை நேரில் கொண்டுவந்து ஆய்வு செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் நேற்று மனு அளித்தனர்.

மாற்றுப் பாதை

இதுகுறித்து, மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்த கிராம மக்கள் கூறியதாவது:

மின்பாதை அமைக்க அண்ணா பல்கலைகழக குழுவினர், ஜிஐஎஸ் சர்வேபடி தேர்வு செய்யப்பட்ட நிலம் 14 கி.மீ., நீளம்தான். இந்த பாதையில் காப்புகாடுகள், குடியி ருப்புகள் மற்றும் கிராமங்கள் இல்லை. இதில், 35 மின் கோபுரங்கள் மட்டுமே வருகிறது. ஆனால், டான் டிரான்ஸ்கோ நிறுவனம் கூடுதலாக 13 கி.மீ., பாதையை தேர்தெடுத்து 70 மின் கோபுரங்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்த திட்டத்துக்காக கலிவந்தப்பட்டு, கல்வாய், கொண்டங்கி, தையூர், புதுப்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஏரிகளில் மின்கோபுரங்கள் அமைக்கப் படுகிறது.

உயர்நீதிமன்ற இடைக்கால தடையின்பேரில், பணிகள் நிறுத்தப் பட்டிருந்த நிலையில் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் தூண்டுதலின்பேரில், மின்சார திட்டத்துக்கு எதிர்ப்பு வெளிப்படுவ தாக பொய்யாக தகவல் பரப்பி வருகின்றனர். அதனால், மாவட்ட வருவாய் அலுவலர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் விவசாய நிலம் உள்ளதா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் ஏதும் நடைபெறுகிறதா, அதற் கான அனுமதி ஏதேனும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ளதா என நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், மின்கோபுரங்களை மாற்றுப் பாதையில் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x