Published : 18 Aug 2016 08:37 AM
Last Updated : 18 Aug 2016 08:37 AM

தூத்துக்குடி, நெல்லை, திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் நியமனம்: பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மாவட்ட அதிமுக செயலா ளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று அறிவித்துள்ளதாவது:

நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து பா.நாராயணபெருமாள், எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயினுலாப்தீன், மீனவர் பிரிவு செயலாளர் எம்.ராஜா(எ) அந் தோணி அமலராஜா ஆகியோர் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளராக நெல்லை நாடாளு மன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபா கரன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக டி.பால்துரை, மீனவர் பிரிவு செயலாளராக ஜே.அகிலன் நியமிக்கப்படுகின்றனர். மேலும், ராதாபுரம் ஒன்றியச் செயலாளராக எம்.ராஜா (எ) அந்தோணி அமல ராஜா, பணகுடி பேரூராட்சி செய லாளராக எம்.ஜெயினுலாப்தீன் நியமிக்கப்படுகின்றனர்.

அமைச்சர் விடுவிப்பு

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப் பாண்டியன் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். திருச்சி மாநகர் மாவட்டச் செய லாளராக உள்ள முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் விடுவிக் கப்படுகிறார். அவருக்கு பதில் மாவட்டச் செயலாளராக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை தெற்கு மாவட்ட அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் அம்மாவட்ட மகளிரணி செயலாளர் பொறுப்பில் இருந்தும் சரஸ்வதி ரெங்கசாமி விடுவிக்கப்படுகிறார்.

மாவட்டங்கள் சீரமைப்பு

அதிமுகவின் அமைப்பு ரீதியாக திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டமானது ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாத வரம், திருவொற்றியூர் சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத் தணி ஆகிய சட்டப்பேரவை தொகுதி களை உள்ளடக்கியதாக இருக் கும். திருவள்ளூர் கிழக்கு மாவட் டச் செயலாளராக அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.அலெக்சாண்டர், மேற்கு மாவட் டச் செயலாளராக பொன்னேரி சட்டப் பேரவை உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மேலும், திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர் வாகிகள் பட்டியல் அறிவிக்கப் படும் வரை, தற்போது உள்ள நிர்வாகி கள் தொடர்ந்து செயல்படுவார்கள். தற்போது பிரிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு உட்பட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x