Published : 30 Dec 2013 11:28 AM
Last Updated : 30 Dec 2013 11:28 AM

ஊழலுக்கு எதிரான அமைப்புகளின் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

ஊழலுக்கு எதிரான அமைப்புகள், கட்சிகள் ஒருங்கிணைந்து மக்கள் நல்வாழ்வு இணையம் என்ற பெயரில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட உள்ளனர்.

‘ஊழலற்ற ஆட்சியை நோக்கி..’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை சென்னை எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடந்தது.

இதனை ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்தது. பொதுமக்கள் உரிமை விழிப்புணர்வு இயக்கம், லஞ்சம் கொடாதோர் சங்கம், ஐந்தாவது தூண், வாய்ஸ் ஆப் இந்தியன், அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கட்சி, லோக் சதார் கட்சி உள்ளிட்ட 17 ஊழலுக்கு எதிரான அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 60 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை கொண்டு வருவது தொடர்பாக கருத்து பரிமாற்றம் நடந்தது.

39 தொகுதிகளில்...

இதுகுறித்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் எஸ்.எம். அரசு தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை அமைப் பதற்காக மக்கள் நல்வாழ்வு இணையம் என்ற கூட்டமைப்பை அமைக்க உள்ளோம்.அதன் சார்பில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x