Published : 06 Jan 2017 08:39 AM
Last Updated : 06 Jan 2017 08:39 AM

சாகுபடி பாதிக்கப்பட்டதால் 12 விவசாயிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கணக்கன்குப்பம் கிராமத் தைச் சேர்ந்தவர் முருகன்(51). இவர் 3 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி விட்டதால் வேதனை அடைந்த முருகன் நெஞ்சுவலி ஏற்பட்டு உயி ரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தர மேரூர் அருகே உள்ள கருவேப்பம் பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனன் என்கிற சீனுவாசன்(56). இவர் நேற்று முன்தினம் இரவு பயிர் களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பெரியவண்ணாங்குப்பத்தைச் சேர்த்த ராஜேந்திரன்(57), தனது 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந் தார். வறட்சி மற்றும் புயல் தாக்கு தலில் பயிர்கள் சேதமடைந்ததால் அறுவடையின்போது ஏக்கருக்கு 10 மூட்டை நெல் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் டி.வாலசுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (62). இவர், 10 ஏக்கரில் மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட வற்றை சாகுபடி செய்திருந்தார். கடும் வறட்சியால் பயிர்கள் கருகிதால் சுப்பையாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள பாப்பாநாடு சின்னக்குமிழி பகுதியைச் சேர்ந்த ராமசாமி(70), நான்கரை ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால், மனமுடைந்து காணப்பட்ட ராமசாமி, நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (35), தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் நெல், நிலக்கடலை, எள் மற்றும் உளுந்து பயிரிட்டிருந்தார். பயிர்கள் கருகிதால் நெஞ்சு வலிப்பதாக கூறிய செல்வராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்தவர் பாப்பா(68). இவர், நான்கரை ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்தார். கருகிய பயிர்களை பார்த்த பாப்பா, அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஓட்டக் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(65). இவர் தனது வயலில் மக்காச் சோளம் பயிரிட்டிருந்தார். பயிர் கள் காய்ந்ததை கண்டு நேற்று வயலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி தர்மன்(62). மாற்றுத் திறனாளியான இவர், தனது வயலில் பயிரிட்டிருந்த உளுந்து பயிர்கள் காய்ந்து வருவதைக் கண்டு நேற்று வயலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம் அருகேயுள்ள ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி(68) இவர் தனது வயலில் உளுந்து விதைத்திருந்தார். தண்ணீர் இல்லாமல் பயிர் கருகியதால் மனமுடைந்த அவர் நேற்று வயலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரி ஒன்றியம் பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நவசீலன்(47). 2 ஏக்கர் குத்தகை நிலத்தில், சம்பா சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீரின்றி பயிர்கள் கரு கியதால் மன வேதனையில் இருந்த நவசீலன் மாரடைப்பால் உயிரிழந் தார். நாகப்பட்டினம் மாவட்டம் கோயில்தாவு பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் (50) என்ற விவசாயியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x