Last Updated : 30 Apr, 2017 09:05 AM

 

Published : 30 Apr 2017 09:05 AM
Last Updated : 30 Apr 2017 09:05 AM

இசை மழையில் நனையும் பெருவம்பா கிராமம்: கலைஞர்களின் நுட்பத்துக்கேற்ப இசைக் கருவிகள் தயாரிப்பு

பாலக்காடு அருகே உள்ள பெருவம்பா கிராமத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வாத்திய ஒலி கேட்கிறது. ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் உடுக்கை, மிரு தங்கம், செண்டை, தபேலா, தவில், டோல் என பல்வேறு வாத்தி யங்களும் வெயிலில் காய்கின்றன.

‘‘6 மாதம் வெயில் காலத்தில் மட்டும்தான் தொழில் இருக்கும். மழைக்காலம் வந்தால் தொழில் இருக்காது” என்று சொல்லும் இந்த கிராமத்தில் வசிக்கும் சுமார் 30 குடும்பத்தினருக்கு வாத்தியக் கருவிகள் செய்வதே தொழில். பக்கத்தில் உள்ள புதுநகரம் ஊரில் பசு, எருமை, ஆடு அறுவை மனைக்குச் சென்று அவற்றின் தோல்களை உடனுக்குடனே வாங்கி வந்து விநோத முறையில் அதை பதப்படுத்தி வாத்தியக் கருவிகள் தயாரிக்கிறார்கள். பல தலைமுறை களாக வாத்தியங்கள் தயாரிப்பதே இவர்களின் தொழில்.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ராமச்சந்திரன்(68) மற்றும் இவரது தாத்தா, பாட்டன், முப்பாட்டன்கள் அனைவருமே இந்த வாத்தியக் கருவிகள் செய்தவர்கள்தான். இவரின் 3 மகன்களும் இதே தொழிலைத்தான் செய்கின்றனர்.

அதிகரிக்கும் ஆர்டர்கள்

ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘12 வயதில் எனது தந்தையிடம் இந்தத் தொழிலை கற்றுக்கொண்டேன்.

அப்போதெல்லாம் மாதத்துக்கு 2 வாத்தியம், ஆண்டுக்கு 4 வாத்திய வேலைகளே வரும். சுற்று வட்டாரங்களில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வாத்தி யங்கள் செய்வோம். அவை பழுதடைந்தால் சரிசெய்தும் கொடுப்போம். இப்போது இசைக் கச்சேரிகளும் பெருகுகின்றன. பள்ளிகளிலும் இசை வகுப்புகள் நடக்கின்றன. அதனால் இதற்கான ஆர்டரும் அதிகமாக வருகிறது” என்றார்.

இவரது மகன் ராஜன் கூறும்போது, ‘‘இங்கிருந்து பலர் மலப்புரம், கோழிக்கோடு, கோய முத்தூர், திருச்சூர், பாலக்காடு போன்ற ஊர்களுக்கு சென்றுள் ளனர். அவர்கள் எங்கே சென்றாலும் இந்தத் தொழிலை மையமாக வைத்தே இயங்குகிறார்கள். ஏனெனில், இந்தத் தொழிலை நேர்த்தியாக செய்யும் ஆட்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

ராஜன், ராமச்சந்திரன்.

சுதி லயம் தெரியவேண்டும்

அந்த அளவுக்கு இது ரத்தத்தில் ஊறிய தொழில். இதை செய்கிறவர்களுக்கு சுதி லயம் தெரிய வேண்டும். இல்லா விட்டால் இசைக் கலைஞர்களின் நுட்பத்துக்கு ஏற்ப கருவிகளை உருவாக்க முடியாது. உதாரணத் துக்கு, ஒரு தபேலா இருபுறமும் எடுத்தால் 4 பாகமாக தோல் இடம்பிடித்திருக்கும்.

மேலே பசுந்தோல், உள்ளே ஆட்டுத்தோல், இடையில் ஆடு, எருமைத் தோல் எல்லாம் குறிப்பிட்ட தன்மையில் இருக்க வேண்டும். செண்டை மேளம் என்றால் அது காளைத் தோல் ஆகும். அதிலேயே ஒவ்வொரு தோல் வைத்தால் ஒவ்வொரு சுதி வரும். இந்த மத்தளத் தோல்களை இழுத்துக் கட்டுவது எருமைத் தோல்’’ என விளக்கினார்.

இந்தியா முழுவதும்

தபேலா செட் சுமார் ரூ.7,500, செண்டை மேளம் ரூ.17 ஆயிரம், மிருதங்கம் ரூ.14 ஆயிரம் என வாத்தியங்களுக்கு ஏற்ப விலை உண்டு. இதற்கு முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து சென்றால் குறிப்பிட்ட நாட்களில் செய்து கொடுக்கிறார்கள். 1 கட்டை சுதியுள்ள வாத்தியத்துக்கும் 5 கட்டை சுதி வாத்தியத்துக்கும் ரூ.1,500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை வித்தியாசம் வரும். இந்த பெருவம்பா கிராமத்தில் வாத்தியக் கருவிகள் வாங்க இந்தியா முழுவதும் இருந்து இசை விற்பன்னர்கள் வருகிறார்கள்.

வங்கி உதவி

இவர்களின் தேவையை உணர்ந்து ‘துகள் வாத்திய நிர்மாண கூட்டுறவு சங்கம்’ என்ற அமைப்பு இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நபார்டு வங்கி மூலம் ரூ.8 லட்சம் செலவில் மத்தளம் மரம் கடையும் இயந்திரம் இந்த அமைப்புக்கு இலவசமாக தரப்பட்டுள்ளது. மத்தளங்களுக்கு பயன்படும் தரமான பலா மரம் பண்ருட்டியில் இருந்து தருவிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x