Published : 08 Jun 2016 08:26 AM
Last Updated : 08 Jun 2016 08:26 AM

பழமையான சாமி சிலைகளை தீனதயாள் கண்டுபிடித்தது எப்படி? - வீட்டில் சோதனை செய்த தொல்லியல் துறையினர் வியப்பு

பழமையான சாமி சிலைகளை தீனதயாள் கண்டுபிடித்த விதங் களை பார்த்து தொல்லியல் துறையினர் வியப்பு அடைந்துள் ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை அருகே முரேஸ்கேட் சாலையில் ஒரு பங்களா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 31-ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி, 71 கற்சிலைகள், 41 ஐம்பொன் சிலைகள், 75 பழமையான ஓவி யங்களை பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழ மையானவை. வீட்டில் இருந்த மான்சிங்(58), குமார்(58), ராஜா மணி(60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிலைகளை பதுக்கி வைத்திருந்த தீனதயாள் கடந்த 3-ம் தேதி இரவு 7.30 மணியளவில் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் முன்பு சரண் அடைந்தார். முதுமை காரணமாக போலீஸார் அவரை கைது செய்யவில்லை. அவரிடம் தினமும் காலை முதல் இரவு வரை போலீஸார் விசாரணை நடத்திவிட்டு, வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

கைப்பற்றப்பட்ட சிலைகளை ஆய்வு செய்து அதன் மதிப்பு மற்றும் பழமை தன்மை குறித்து ஆய்வு செய்ய பெங்களூரில் இருந்து தொல்லியல் துறை நிபுணர்கள் வந்துள்ளனர். தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநர் சத்தியபாமா தலைமையில் வந்துள்ள நிபுணர்கள் கடந்த 6-ம் தேதி முதல் சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சிலைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர், ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாள் வீட்டுக்கும் சென்று அங்கிருந்த ஆவணங்கள், புத் தகங்களை ஆய்வு செய்து ஆச்சரியப்பட்டுவிட்டனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறும்போது, "தொல் லியல் துறையினரிடம் இருக்க வேண்டிய பழமையான சிலை கள் குறித்த ஆவணங்கள், பழமையான சிலைகளை கண்டு பிடிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், பழமையான கோயில்களில் உள்ள சிலைகள் குறித்த வரலாற்று புத்தகங்கள் உட்பட பல அம்சங்கள் தீனதயாள் வீட்டில் இருந்துள்ளன. இவற்றை பார்த்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு வியப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இவற்றை தீனதயாள் எப்படி கண்டுபிடித்து சேகரித்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x