Published : 07 Aug 2016 11:26 AM
Last Updated : 07 Aug 2016 11:26 AM

சாதிப் பாகுபாட்டினால் ஊட்டச்சத்து உணவு கிடைகாமல் வாடும் மல்லஹல்லி பழங்குடியினக் குழந்தைகள்

கோட்டையூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரிய மல்லஹல்லி கிராமத்தின் பழங்குடி குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதில்லை.

பெரிய மல்லஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடி குழந்தைக்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புச் சேவைகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்துணவு கிடைப்பதில்லை.

பழங்குடிப் பெண் மங்கம்மா இது பற்றி கூறும்போது, “எங்கள் குழந்தைகளைப் பாருங்கள், இவர்கள் ஏதாவது கூறினால் பிரச்சினைதான் வரும். நாங்கல் அங்கன்வாடிக்கு எங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை, அங்கிருந்தும் எங்களை வந்து பார்ப்பதுமில்லை”

பெரும்பாலும் உயர்சாதி லிங்காயத் சமுதாயத்தினர் வசித்து வரும் இந்த கிராமத்தில் பழங்குடி இனத்தவர்கள் மீது சாதிப்பாகுபாடு செலுத்தப்படுகிறது. ஆதிக்க சாதி நடைமுறைகளினால் இந்த பழங்குடி சமுதாயத்தினர் அங்கன்வாடிக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இன்று வரை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புச் சேவைகள் மையத்தின் உணவு இந்தக் குழந்தைகளைச் சென்றடைந்ததில்லை. இதில் மேலும் ஒரு விஷயன் நம்மையெல்லாம் துணுக்குறச் செய்வதாகும், அங்கன்வாடி ஆசிரியை பச்சையம்மாள், முட்டைகளுக்கு பதிலாக வாழைப்பழங்கள் அனுப்புமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதியுள்ளார். அதாவது, “லிங்காயத் குழந்தைகள் முட்டை சாப்பிடாது” என்று கூறுகிறார் பச்சையம்மாள்.

“பழங்குடிக் குழந்தைகள் இங்கு வருவதில்லை, அவர்கள் தகட்டி பஞ்சாயத்து பகுதியிலும் இல்லை” என்கிறார் பச்சையம்மாள். மல்லஹல்லி பஞ்சாயத்தில் உள்ள அங்கன்வாடிதான் முக்கிய மையம். இந்த மையத்தின் சமையல் பணியாளர் துதம்மாவோ நாளொன்றுக்கு 30 குழந்தைகளுக்கு 1.5கிலோ அரிசி சமைக்கப்படுவதாக கூறுகிறார். ஒவ்வொரு குழந்தைக்குமான அளவு என்ன என்று கேட்டால் துதம்மா திணறுகிறார், தட்டுத் தடுமாறுகிறார்.

ஆனால் அங்கன்வாடியின் ஊட்டச்சத்துணவை விடவும் மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பழங்குடியினர் கூறுகின்றனர்.

இந்திர ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இவர்களுக்காக கட்டப்பட்ட 30 வீடுகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது, இடிந்து விழுந்து நிலையில் உள்ளது. 7 வீடுகளின் கூரைகள் விழுந்து விட்டனர். இதனால் அன்மையிலுள்ள காடுகளுக்கு இவர்கள் வசிக்கச் சென்றுவிட்டனர்.

இப்பகுதிக்குக் ஹொகேனக்கல் பைப் லைனும் கிடையாது, அல்லது பஞ்சாயத்து நீர் பைப் லைனும் கிடையாது. பல வீடுகளுக்கு ரேஷன் அட்டைகள் கிடையாது.

ஆனால் கிராமத் தலைவர் சிவருத்ரப்பா என்ற லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரோ பாகுபாடு எதுவும் இல்லை என்கிறார்.

பழங்குடி காலனி குழந்தைகள் சாப்பிடும் அதே தட்டில் உங்கள் குழந்தைகள் சாப்பிடுகின்றனரா என்று அவரிடம் கேட்ட போது அசவுகரியமான மவுனத்தைத் தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x