வி.சி.கட்சியினரின் ‘தலித் முதல்வர்’ கோரிக்கை: மக்கள் நலக் கூட்டணியில் சிக்கல்?

வி.சி.கட்சியினரின் ‘தலித் முதல்வர்’ கோரிக்கை: மக்கள் நலக் கூட்டணியில் சிக்கல்?
Updated on
2 min read

தமிழகத்தில் தலித் ஒருவர் முதல் வராக வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் திடீரென கோரிக்கை விடுத்திருப்பது, மக்கள் நலக் கூட்டணியில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளாக தெரிகிறது.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை கடந்த நவம் பர் 2-ம் தேதி அறிவித்தன. இந்தக் கூட்டணியின் மாநாடு, மதுரையில் கடந்த வாரம் நடந் தது. கூட்டணி சார்பில் குறைந்த பட்ச செயல் திட்டமும் வெளி யிடப்பட்டது.

இதற்கிடையே, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறி விக்க விருப்பம் தெரிவித்தனர். மதிமுகவினரோ வைகோவை முதல்வர் வேட்பாளர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், மக்கள் நலக் கூட்டணி சார்பில் இப் போதைக்கு முதல்வர் வேட் பாளரை அறிவிக்கப் போவ தில்லை என்று கூறப்பட்டது.

இந்தச் சூழலில், தமிழகத் துக்கு தலித் ஒருவர் முதல்வர் ஆக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீ ரென வலியுறுத்தத் தொடங்கி யுள்ளனர். இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண் டும் என கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேட்டு வரு கின்றனர். இது மக்கள் நலக் கூட்டணியில் சிக்கலை உரு வாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசிக பொதுச் செயலாளர் ரவிகுமார் தனது முகநூல் பக்கத்தில், ‘தலித் முதல்வர் வேண்டும் என்பவர்கள் இதனை பகிருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘மக்கள் நலக் கூட்டணி என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. தமிழகத்தில் இத்தனை ஆண்டுகால வரலாற் றில் தலித் ஒருவர் முதல்வராக முடியவில்லை. ஆதி திராவிடர் நலத்துறை, துணை சபாநாயகர் பதவி போன்ற கோட்டாக்கள்தான் எங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதுபற்றிய ஆதங்கத்தைதான் சொன்னேன். இதற்கு இடதுசாரிகளும், திரா விட இயக்கங்களும்தான் பதில் சொல்ல வேண்டும்’’ என்றார்.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசுவும் தலித் ஒருவர் முதல்வராக வேண் டும் என்று கருத்து தெரிவித் துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘முற்போக்கான மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் தலித் ஒருவர் முதல்வராக முடியவில்லை. எனவே, தலித் ஒருவரை முதல் வர் வேட்பாளராக அறிவிக்கா விட்டாலும், தேர்தலுக்கு பிறகா வது தலித் தலைவரை முதல்வ ராக்க வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, ‘‘மக்கள் நலக் கூட் டணியை உருவாக்கியபோதே, முதல்வர் வேட்பாளரை அறிவிப் பதில்லை. தேர்தலில் வெற்றி பெற்றால் அதுபற்றி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று 4 கட்சி தலைவர்களும் பேசி முடிவெடுத்துவிட்டோம். எங்கள் கட்சியில் சிலர் கோட்பாட்டு ரீதி யாக தலித் முதல்வர் வேண்டும் என்கின்றனர். அதில், உடன்பாடு உள்ளது என்றாலும் அதை மக் கள் நலக் கூட்டணியில் நாங்கள் நிர்பந்திக்கவில்லை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in