Last Updated : 06 Apr, 2017 08:25 AM

 

Published : 06 Apr 2017 08:25 AM
Last Updated : 06 Apr 2017 08:25 AM

நெருக்கடிகளில் இருந்து மீளாத சென்னை கட்டுமானத் துறை

வழிகாட்டி மதிப்பு உயர்வு, வரி விதிப்பு முறை, சிமெண்ட் போன்ற அடிப்படைப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னையில் கட்டுமானத் துறை நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டு மானத் துறை 5 சதவீதப் பங்கு வகிக்கிறது. இதில் சென்னைக் கட்டுமானத் துறையின் பங்கு முக்கியமானது. இதற்குக் காரணம் சென்னையில் கிடைக்கும் அடிப்படை வசதிகள், குறைந்த வாழ்க்கைச் செலவு போன்ற அம்சங்கள். மேலும் ஐடி துறை மட்டுமல்லாது இயந்திர உற்பத்தி, கார் உற்பத்தி, ஏற்றுமதி போன்ற பல தொழில்களின் மையமாகச் சென்னை இருப்பதும் முக்கியக் காரணம். எனினும் கட்டிய வீடுகளை விற்க முடியாதது, புதிய வீட்டு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வீடுகளை ஒப்படைக்க முடியாதது எனப் பல நெருக்கடிகள் சென்னையில் உள்ளன.

தென் சென்னையின் முக்கியக் கட்டுமான நிறுவனமான அக்ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டிபாபு விடம் இதுபற்றிக் கேட்டபோது, “சென்னைக் கட்டுமானத் துறை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த தேக்கத்திலிருந்து மீண்டுள் ளது. பட்ஜெட்டில் கட்டுமானத் துறை வளர்ச்சிக்குப் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் சென்னைக் கட்டுமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என்கிறார்.

ரூபி பில்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரூபி.மனோகரன், “வாடிக்கையாளரிடமிருந்து வரும் அழைப்புகள் இரு மடங்காக உயர்ந்திருக்கின்றன. இப்போது வீடு வாங்குவது நல்ல முதலீடு” என்கிறார்.

சென்ற ஆண்டு நிறைவேற்றப் பட்ட ரியல் எஸ்டேட் சட்டம், கட்டுநர்களுக்குப் புதிய சிக்கலைக் கொண்டு வந்திருப்பதாகச் சொல் கிறார் புறநகர் கட்டுமானச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரகுநாத். இந்தச் சட்டப்படி கட்டுநர்-வாடிக்கையாளர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தைப் பதிவுசெய்ய வேண்டியது அவசியம். “ஏற்கெனவே சேவை வரி, பத்திரப் பதிவு எனப் பல கட்டணங்கள் இருக்கும்போது இந்தப் புதிய சட்டம் மேலும் சுமையாகிறது. வீட்டைப் பதிவு செய்வதற்கு ரூ.650 (சதுர அடிக்கு) ஆகிறது. பத்து ஆண்டுக்கு முன்பு இது 100 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது” என்கிறார் ரகுநாத்.

ஆனால் இந்தச் சட்டம் அவசி யமானதுதான் எனச் சொல்லும் ரூபி.மனோகரன், “வாடிக்கை யாளர்களின் பாதுகாப்பு முக்கிய மானது. நாங்கள் வாடிக்கையாளர் களுடனான ஒப்பந்தப்படி சரியான தேதியில் முடித்துக்கொடுத் துள்ளோம். மற்ற கட்டுநர்களும் இதைப் பின்பற்ற இந்தச் சட்டம் வழிவகை செய்யும்” என்கிறார்.

ஆனால் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம், தட்டுப் பாடு போன்ற சில சிக்கல்கள் தொடர்கின்றன. சிமெண்ட் விலை யேற்றம், மணல் தட்டுப்பாடு, வழிகாட்டி மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் சென்னையில் புதிய திட்டங்கள் சென்ற ஆண்டு வெகுவாகக் குறைந்ததாக ஜே.எல்.எல். ரியல் எஸ்டேட் ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. சிமெண்ட் விலை அடிக்கடி உயர்வதும் மணல் தட்டுப் பாடும் தண்ணீர்த் தட்டுப்பாடும் தொழிலை முடக்கக்கூடியவை என்கிறார்கள் கட்டுநர்கள். விலையேற்றத்தால் சிறிய கட்டு மான நிறுவனங்கள் பாதிக்கப்படும். குறைந்த விலை வீடுகள் உருவாக்கப்படுவதும் குறையும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, சில மோசடியான கட்டுமான நிறுவனங்களால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப் படும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. நில மோசடி, முன்பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, நியாயமற்ற முறையில் திடீரென வீட்டின் விலையை உயர்த்துதல், ஒப்புக்கொண்ட காலத்தில் வீடுகளை ஒப்படைக்காமல் வாடிக்கையாளர்களை வீண் அலைச்சலுக்கும், மன உளைச் சலுக்கும் ஆளாக்குதல் என வாடிக்கையாளர்களை பாதிக்கும் பல சம்பவங்கள் தொடர்கின்றன.

தங்களது தொழிலை பாதுகாக்க வேண்டுமானால், இத்தகைய மோசடி நிறுவனங்களை கட்டுப் படுத்தவும், அவர்களை அம்பலப் படுத்தவும் நியாயமாக தொழில் புரியும் நிறுவனங்களும், கட்டுனர்கள் சங்கங்களும் முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x