Published : 19 Apr 2017 08:08 AM
Last Updated : 19 Apr 2017 08:08 AM

எரிபொருள் சிக்கனத்துக்காக மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது: தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

எரிபொருள் நுகர்வை பொதுமக் கள் குறைப்பதற்காக மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட் ரோல் நிலையங்கள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கத் தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகி யோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளின்படி பெட்ரோலிய நுகர்வை பொதுமக்கள் குறைப் பதற்காக எங்களின் விற்பனை நிலையங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளித்து நாட்டுக்கு எங்களின் பங்களிப்பை செலுத்த உள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிப்பதால், எரிபொருள் பயன்பாடு குறைந்து, அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசை குறைக்க இயலும். மேலும், எரிபொருள் சிக் கனத்தின் வாயிலாக நாட்டின் அந் நிய செலாவணியை மிச்சப்படுத்து வதன் மூலம் நாடு வளர்ச் சிப் பாதையை நோக்கி பயணிக்கும்.

தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.56,000 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் நுகரப்படுகிறது. இதில் ஒரு நாள் சிக்கனத்தை மேற் கொண்டால் ரூ.153 கோடி மதிப்பி லான எரிபொருள் மிச்சப்படும்.

எனவே, அகில இந்திய பெட் ரோலிய விற்பனையாளர்களின் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4,850 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் வரும் மே 14-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங் காது.

இருப்பினும், அவசர தேவைக் காக வாகனங்களுக்கு எரிபொருள் தேவைப்படுவோருக்கு விநி யோகம் செய்ய ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் ஞாயிற் றுக்கிழமைகளில் ஓர் ஊழியர் பணியில் இருக்கும்படி பார்த் துக்கொள்ள வேண்டும் என விற்பனையாளர்களிடம் தெரிவிக்க உள்ளோம்.

இந்த விஷயத்தில் ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸார் ஆகிய தனியார் நிறுவன பெட்ரோல் நிலையங்கள் என்ன முடிவெடுத்துள்ளன என்பது எங்களுக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேரடி விற்பனை நிலையங்கள்

பெட்ரோலிய விற்பனையாளர் கள் சங்கத்தின் கீழ் உள்ள விற்பனை நிலையங்கள் தவிர இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம், இந்துஸ்தான் பெட் ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட நேரடி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுகின்றன.

அவை ஞாயிற்றுக்கிழமை செயல்படுமா என்பது குறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நேரடி விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல் படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x