Last Updated : 18 Apr, 2017 08:18 AM

 

Published : 18 Apr 2017 08:18 AM
Last Updated : 18 Apr 2017 08:18 AM

ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் திருத்தமா?- இணையதளம், செயலி மூலம் சரிசெய்ய வாய்ப்பு

மின்னணு குடும்ப அட்டை விநியோ கிப்பதற்கு முன்பே இணையதளம், செல்போன் செயலி மூலமாக அதில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களுக்கு வசதி செய்யப் பட்டுள்ளது. உரிய திருத்தங்களை செய்து, துல்லியமான விவரங் களுடன் கூடிய மின்னணு குடும்ப அட்டையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவை கடந்த 2005-ம் ஆண்டு வழங்கப் பட்டவை. தொடர்ந்து பல ஆண்டு களாக அட்டை புதுப்பிக்கப்படாமல், இணைப்புத் தாள்கள் ஒட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், பழைய அட் டைக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிவைத்தார்.

தற்போது மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு, அந்தந்த பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின் றன. ஜூலை மாதத்துக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின் னணு அட்டை வழங்க இலக்கு நிர் ணயித்து உணவுத்துறை செயல் பட்டு வருகிறது. இதுவரை, பொது மக்களுக்கு 9 லட்சம் மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மின்னணு குடும்ப அட்டைகள் போதிய அளவு அச்சடிக்கப்பட்டு விட்டன. விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே அச்சடிக்கப்படுகிறது. இத னால், சற்று தாமதம் ஏற்படுகிறது. தற்போது வரை 40 லட்சம் அட்டைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப் பப்பட்டுள்ளன. அதில் 9 லட்சம் குடும்பங்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டு, அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 2 நாட்களில் மின்னணு அட்டை வழங்கும் பணிகள் தொடங்கிவிடும். விரைவில் பணிகள் முடிக்கப்படும்.

திருத்தம் தொடர்பான தகவல்

மின்னணு குடும்ப அட்டையைப் பொருத்தவரை, திருத்தம், புகைப் படம் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற் கொள்ள வட்டார வழங்கல் அலுவல கம் அல்லது உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவல கங்களுக்கு செல்ல வேண்டிய தில்லை. குடும்ப அட்டைதாரர்களே செல்போன் செயலி, இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மேற் கொள்ள முடியும்.

இந்நிலையில், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இல் லாத குடும்ப அட்டைகள் தனியாக பிரிக்கப்பட்டு, உரிய விவரங்களை திருத்துவதற்கு வசதி செய்யப்பட் டுள்ளது. சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு இதுதொடர் பான பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் அந்த பட்டியல் ஒட் டப்பட்டுள்ளது. இதுதவிர, செல் போன் எண் இணைக்கப்பட்டிருந் தால், அதன் மூலமாகவும் சம்பந்தப் பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு கடை ஊழியர்கள் தகவல் அளித்து வருகின்றனர்.

செல்போன் செயலி மூலம்..

திருத்தம் செய்பவர்கள் www.tnpds.gov.in என்ற இணைதளத்தில் பயனாளர் நுழைவு பகுதிக்கு சென்று, இணைக்கப்பட்ட செல் போன் எண்ணைப் பயன்படுத்தி திருத்தம், புகைப்படம் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். செல்போன் செயலி மூலமாகவும் இந்த திருத்தங்களை செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x