Published : 28 Oct 2014 10:35 AM
Last Updated : 28 Oct 2014 10:35 AM

கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண் திரும்பி வந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசிய மங்கலம் தைலமரக் காட்டில், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. ஆலங்குடி போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், திருக்களம்பூரைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி சின்னையா என்பவர், தனது மகள் வெண்ணிலாவைக் காண வில்லை என்று போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, தைலமரக் காட்டில் கிடந்த சட லத்தை சின்னையாவிடம் காண் பித்தனர். அது, தனது மகள் வெண்ணிலாவின் சடலம் தான் என சின்னையா தெரிவித் துள்ளார். பின்னர் அந்த சடலம் சின்னையாவிடம் ஒப்படைக்கப் பட்டது. பெண் கொலை வழக்கு தொடர்பாக ஆலங்குடி காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலை மையிலான தனிப் படையினர் விசாரணை நடத்தினர்.

வெண்ணிலாவுக்கும், அவரது உறவினரான சேவினிப்பட்டி ரமேஷுக்கும் பிப். 2-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாட்டால் கணவரை விட்டுப் பிரிந்த வெண்ணிலா, சில நாட்களிலேயே பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படவே, சில நாட்களிலேயே வெண்ணிலா யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பது போலீஸாரின் விசாரணை யில் தெரியவந்தது. வெண் ணிலா கொலை செய்யப்பட்டிருக் கலாம் என்ற சந்தேகத்தின் அடிப் படையில் போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடை யில், வெண்ணிலா உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் விருப்பமில்லாத வருடன் திருமணம் செய்து கொடுத் ததால் பெற்றோருடன் வாழப் பிடிக்காமல், வீட்டிலிருந்து வெளி யேறி வேலைக்குச் சென்றதாகவும், வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவரை அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கொலை செய்யப் பட்டுவிட்டதாகக் கருதி, வேறொரு வரின் சடலத்தை வாங்கி இறுதிச் சடங்கு செய்த பெற்றோர், 6 மாதங்களுக்குப் பிறகு பெண் உயிருடன் வந்ததால் மகிழ்ச்சி யடைந்தனர். எனினும், வெண்ணி லாவின் பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்ட சடலம் யாருடையது என்பது போலீஸாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x