Published : 01 Jun 2016 08:58 AM
Last Updated : 01 Jun 2016 08:58 AM

ஜூன் 3-ல் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம்: கருணாநிதியின் 93-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுகவினர் ஏற்பாடு

திமுக தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அக்கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, வரும் 3-ம் தேதி தனது 93-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்துள்ளது. ஆனா லும் 89 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 13-வது முறையாக கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார். திரு வாரூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட அவர், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், அவரது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுக வினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் 3-ம் தேதி மாலை 5 மணிக்கு கருணாநிதியின் 93-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. மாவட்டச் செயலாளர் ஜெ.அன் பழகன் எம்எல்ஏ தலைமையில் நடை பெறும் இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள் ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இன்று கருத்தரங்கம்

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று மாலை 6 மணிக்கு வேப்பேரி பெரியார் திடலில் ‘முத்தமிழுக்கு ஏது மூப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கவியரங்கம், கருத் தரங்கம், பட்டிமன்றம், பொதுக் கூட்டம், ரத்ததான முகாம், கலைநிகழ்ச்சிகள், கோலப் போட்டி, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள், மாணவ, மாணவிகள், ஏழைகளுக்கு உதவிப் பொருள்கள் வழங்கு தல் என பல்வேறு நிகழ்ச்சி களுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x