Published : 17 Aug 2016 09:46 AM
Last Updated : 17 Aug 2016 09:46 AM

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பள்ளிக் குழந்தைகள்: ஆன்லைனில் புகார் செய்ய புதிய வசதி - ஆக.26-ல் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள் ஆன் லைனில் புகார் செய்ய பள்ளிகளில் “இ-பாக்ஸ்” என்ற புதிய வசதி ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

லதா ரஜினியின் தயா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம், காணாமல்போன சாலையோரக் குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் “அபயம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்கவிழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்துகொண்டு அபயம் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குழந்தைகள் ஆபத்தில் சிக்கும்போது அதுகுறித்து தெரிவிப் பதற்காக 1098 என்ற இலவச தொலைபேசி எண் வசதித் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

காணாமல் போகும் சாலை யோரக் குழந்தைகளை மீட்கும் பணியை அரசும் காவல்துறையும் மட்டும் செய்துவிட முடியாது. இதில், சமுதாயத்தின் பங்களிப்பும் அவசியம். ஆள் கடத்தல் தடுப்பு மசோதா தொடர்பாக தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த மசோதா டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

வீடுகளிலும், பள்ளிகளிலும் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். பள்ளி களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள் ஆன்லைனில் புகார் செய்யும் வசதி (இ-பாக்ஸ்) ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கிவைக்கப்பட உள்ளது. இதில் பதிவாகும் புகார்கள் ரகசிய மாக வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாலி யல் குற்றவாளிகளின் பட்டியலை தயாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

கஸ்தூரி அண்ட் சன்ஸ் குழுமத் தின் தலைவர் என்.ராம் பேசும்போது, “தெருவோரக் குழந்தைகள் பிரச்சினை இன்னும் நீடிப்பதை நினைத்து இந்தியா வெட்கப்பட வேண்டும். நீண்ட காலத்துக்கு முன்னரே இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப் படாததால் இப்பிரச்சினை இன்று வரை இருந்துகொண்டிருக்கிறது. சென்னை நகரில் மட்டும் 40 ஆயிரம் சாலையோரக் குழந்தைகள் உள்ளனர். இது மிகுந்த மனவேத னையைத் தருகிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அந்த வகையில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில் அபயம் என்ற திட்டத்தை லதா ரஜினி தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி ஜி.திலகவதி, சென்னை தெற்கு ரோட்டரி கிளப் தலைவர் நட ராஜன், கருணாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பால் சுந்தர் சிங் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

புதிய திட்டம் குறித்து தயா பவுண்டேஷனின் தலைவரான லதா ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், “ சாலையோரங்களில் வாழும் குழந்தைகளுக்கு பாது காப்பில்லாத சூழல் உள்ளது. குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் தற்போது அதிகரித் துள்ளன. காணாமல் போகும் சாலையோரக் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக அபயம் என்ற இந்த புதிய திட்டத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் செய்யும் சமூக பணிகளுக்கு எனது கணவர் ரஜினி எப்போதுமே பக்கபலமாக இருப்பார். அதுவும் குழந்தைகள் தொடர்பான பணி என்பதால் இதற்கு அதிக ஆதரவாக இருக்கிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x