Published : 24 Feb 2017 09:20 AM
Last Updated : 24 Feb 2017 09:20 AM

ஜெ.வுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட தொண்டர்

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் ஓம்பொடி சி.பிரசாத் சிங். வட சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலராகவும், கட்சியின் தலைமைக் கழக பொதுக்குழு நியமன உறுப்பின ராகவும், குடிசை மாற்று வாரிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் அஞ்சல் துறையின் ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்முறையாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரசாத் சிங் கூறும் போது, ‘‘ஜெ. மீது கொண்ட பற்று காரணமாக, அவரது 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு, அஞ்சல் துறையின் ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ், ஜெ.வின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலையை பெற்று, வெளியிட்டேன். அதற்காக ஜெ.விடம் உரிய அனுமதி பெற்று, உரிய ஆவணங்களையும் அவரிடமே பெற்று அஞ்சல் தலையை வெளியிட்டேன். அவர் மறைந்துவிட்ட நிலையில், இனி தனி நபரால் அவரது படம் இடம்பெற்ற அஞ்சல் தலையை வெளியிட முடி யாது’’ என்றார்.

இது தொடர்பாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மை ஸ்டாம்ப் திட்டத்தின் கீழ், ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டுமென்றால், அஞ்சல் தலையில் புகைப்படம் இடம்பெறும் நபரின் அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. விண்ணப்பதாரர் குறிப்பிடும் நபரின் படம் இடம்பெற்ற 12 அஞ்சல் தலைகள் கொண்ட தாள் வழங்கப்படும். கூடுதல் தாள்களுக்கு தலா ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 10 நாட்களில் அஞ்சல் தலைகள் வழங்கப்படும். இறந்தவர்களுக்கு, இத்திட் டத்தின் கீழ் அஞ்சல் தலை வெளியிட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x