Published : 01 Jun 2016 11:28 AM
Last Updated : 01 Jun 2016 11:28 AM

பெரிய திரைப்படங்கள் வசூல் லாபகரமாக இல்லை: மதுரை, ராமநாதபுரம் விநியோகஸ்தர்கள் அதிருப்தி

பெரிய திரைப்படங்கள் வசூல் லாபகரமாக இல்லை என மதுரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோ கஸ்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை, ராமநாதபுரம் யுனைடெட் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் அசோசி யேஷன் பொதுக் குழு கூட்டம் சங்க கவுரவத் தலைவர் ஜி.என். அன்புசெழியன், தலைவர் ஆர்.செல்வி ன்ராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயலர் எம்.ஓ.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து அவர்கள் கூறி யதாவது: மதுரை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள திரையரங்குகளில் நுழைவுக் கட்டணம் குறைவாக உள்ளது. நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக ஏற் கெனவே அளித்த மனு மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து திரையங்கு நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரந்தோறும் அதிகளவில் வெளியாகும் திரைப்படங்கள் எண்ணிக்கையை கட்டுப் படுத்த தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்து ழைப்பு கொடுப்போம்.

சமீப காலமாக தமிழ் திரைப் படங்களின் விலை மிக அபரிமிதமாக உள்ளது. பெரிய திரைப்படங்களின் வசூல் விநியோகஸ்தர்களுக்கு லாப கரமாக இல்லை. பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திரைப்படத் தொழிலையே நம்பி தொழில் செய்யும் திரைப் பட விநியோகஸ்தர்களும், உரி மையாளர்களும் தொடர்ந்து தொழில் செய்யவும், நலிந்துவரும் திரைப்படத் தொழிலைக் காப்பாற்ற நடிகர், நடிகைகள் தங்கள் ஊதிய த்தைக் குறைக்க வேண்டும்.

ரூ.50 லட்சத்துக்கு மேல் ஊதியம் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகி யோரிடம் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் அவர்களின் ஊதி யத்தில் 25 சதவீதம் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். படம் வெளியான ஆன பின்பு படம் வெற்றி பெற்று லாபம் கிடைத்தால் நிறுத்தி வைத்திருந்த 25 சதவீதம் பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

தோல்வி ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டால் அந்த 25 சதவீதம் ஊதியத்தை அதன் தயாரிப் பாளர்கள், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சதவிகித அடிப்படையில் பகிர்ந்து வழங்க வேண்டும்.

இதற்கான முயற்சியை தமிழ் திரைப்படத் துறையில் உள்ள சங்கங்கள் ஒன்றுகூடி உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x