Published : 26 Jan 2014 09:29 AM
Last Updated : 26 Jan 2014 09:29 AM

சென்னை - மாமல்லபுரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: அமைச்சர் வாசன் தகவல்

தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்வழி மேம்பாட்டு திட்டத்தை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கிவைத்தார். இதன்மூலம் சென்னை - மாமல்லபுரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து உருவாகும் என்று கூறினார்.

சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக் கழகத்தில் தேசிய நீர்வழி ஆணைய அலுவலகத்தை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். தெற்கு பக்கிங்காம் கால்வாய் தேசிய நீர்வழி மேம்பாட்டு திட்டத்தையும் துவக்கி வைத்தார். இத்திட்டம் பற்றி நிருபர் களிடம் அமைச்சர் வாசன் கூறியதாவது:

நாட்டில் உள்ள நீர்வழித்தடங்களை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. இதில் முதலாவதாக தமிழகத்தின் தெற்கு பக்கிங்காம் தேசிய நீர்வழித்தடத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சோழிங்க நல்லூர் - கல்பாக்கம் இடையி லான தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்வழித்தடத்தை மேம்படுத்த அரசு ரூ.123 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் 300 டன் எடை கொண்ட சரக்கு கப்பல்கள் அந்த வழியே வந்து போகலாம். எதிர்காலத்தில் சென்னை - மாமல்லபுரம் இடையே அதிநவீன பயணியர் மற்றும் சுற்றுலாப் பயண கப்பல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியும். முதல் கட்ட பணிகள் இரண்டரை ஆண்டுகளில் நிறைவடையும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

மார்ச்சில் பணிகள் துவக்கம் தெற்கு பக்கிங்காம் கால் வாய் நீர்வழித்தடத்தை மேம் படுத்துவதற்கான திட்டப் பணிகள் மார்ச் முதல் வாரம் தொடங்குவதாக இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத் தலைவர் அமிதாப் வர்மா தெரிவித்தார்.

இந்த நீர்வழித்தடம் மேம்படுத்தப்பட்டால், காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள வெளி நாட்டு நிறுவனங்கள் தங்களது மூலப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்வது எளிதாகும் என்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய கப்பல் துறை அமைச்சக செயலர் விஸ்வபதி திரி வேதி, இந்திய கடல் சார் பல்கலைக்கழக துணை வேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி, சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x