Published : 11 Mar 2017 09:10 AM
Last Updated : 11 Mar 2017 09:10 AM

ஆர்.கே.நகரில் போட்டியிட மார்க்சிஸ்ட் விருப்பம்? - ஜி.ராமகிருஷ்ணனுடன் திருமாவளவன் சந்திப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி விருப்பம் தெரி வித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, ஓபிஎஸ், தீபா, திமுக பல முனைப் போட்டி மற்றும் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல்களாலும் இந்த இடைத் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக, ஓபிஎஸ் அணி, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பொதுச்செய லாளர் ரவிகுமார் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடவில்லை.

அப்போது ம.ந.கூட்டணியில் இருந்த வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் போட்டியிட விரும்பாததால் இடதுசாரி கட்சிக ளும் அதற்கு உடன்பட நேரிட்டது. ஆனால், தற்போது வைகோ இந்தக் கூட்டணியில் இல்லை.

நேற்றைய சந்திப்பின்போது ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பத்தை திருமாவளவனிடம் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். கடந்த 2016 பொதுத் தேர்தலில் ம.ந.கூட்டணி சார்பில் போட்டியிட்ட வசந்தி தேவி 4 ஆயிரத்து 182 வாக்குகளை மட்டுமே பெற்றார். அப்போது தேமுதிக, மதிமுக, தமாகாவும் கூட்டணியில் இருந்தது. இதனை திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், 2015-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் போட்டியிட்டதை சுட்டிக்காட்டிய ஜி.ராமகிருஷ்ணன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத் தியுள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘‘ஆர்.கே.நக ரில் போட்டியிட வேண்டும். மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதே மக்கள் நலக் கூட்டணியின் விருப்பம். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட 3 கட்சிகளும் பேசி விரைவில் முடிவு எடுப்போம்’’ என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறப் படுகிறது. கடந்த 2015 இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிட விருப்பம் தெரிவித் துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x