Published : 08 Aug 2016 10:00 AM
Last Updated : 08 Aug 2016 10:00 AM

வங்கித் தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி: சென்னையில் தொடங்கியது

ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவ-மாணவிகளுக்கான இலவச வங்கித்தேர்வு பயிற்சி சென் னையில் நேற்று தொடங்கியது.

தாழ்த்தப்பட்ட, பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்காக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெஃபி) அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துடன் இணைந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 28 இடங்களில் வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. இந்த இலவச பயிற்சி வகுப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு பெஃபி தலைவர் தி.தமிழரசு தலைமை தாங்கினார். பெஃபி பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், “கடந்த 1992 முதல் வங்கி பணி நியமனங்கள் நிறுத் தப்பட்டிருந்தன. வங்கி ஊழியர் சங்கங்களின் தொடர் போராட் டத்தினால்தான் 2009-க்கு பிறகு பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. தற்போது வங்கிகளை படிப் படியாக தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக பெஃபி உள்ளிட்ட அமைப்புகள் போராடுகின்றன” என்றார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், “வேலை கிடைத்ததும் மாண வர்கள் தேங்கிவிடக் கூடாது. ஒடுக்கப்பட்டவர்களை சமூக ரீதியாக விடுதலைப் பெற வைப்ப தோடு, பொருளாதார ரீதியாகவும் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்தகைய வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார். “அதிகளவி லான செய்முறை பயிற்சிதான் தேர்ச்சிக்கு வழிவகுக்கும். நம்பிக்கையோடு அணுகுங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்றார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மூத்த உதவித் தலைவர் தாமஸ் பிராங்கோ. நிறைவாக பெஃபி பொருளாளர் எம்.சண்முகம் நன்றி கூறினார். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஏறத்தாழ 300 பேர் கலந்துகொள்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x